படக்கவிதை போட்டி 14/1/2022

தலைப்பு : பல உ(வ)யிர்க்கு பசி ஒன்று

குப்பை கிடங்கில் தேடலுடன் //
நான்கு கால்களும் //
இரண்டு கால்களும்...

ஒன்றுக்கு அழுகையில்லை //
இன்னொன்றுக்கு கண்ணீரில்லை //
யாருமில்லை என்றதால்...

அலுமினிய தட்டில் உண்ண //
வீட்டு உரிமையாளி இல்லை //
தாயூட்ட தாய் மடி இந்த குப்பையோ...

மானம் காக்க கவசமானது //
கிழவன் எறிந்த வேட்டியும் //
பொத்தால் மழை உடையும்...

கல்லும் முள்ளும் குத்தாமல் //
காலுக்கு கவசமானது //
தார்பாய் காலணிகள்...

வறுமையில் தனிமையில் வருந்தவில்லை // ஆனால் வருந்தினேன் - நான்...

வயிரோடு பசி வைத்து //
சிருமையில் படைத்து //
தெருவில் விட்டதற்காக...

இறக்கமில்லதா இறைவன் //
என்பதற்காக முடங்கிட மாட்டேன் //
தேடுவேன் - குருதி...

உறையும் வரை தேடுவேன் //
முயற்சி திருவினையாக்கும் //
வாழ்ந்திட பிறந்தேன் - வாழ்வேன் !!


சங்கவி சகி
நாமக்கல்.

0 Comments