அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

தலைப்பு : 
அன்பிற்குரிய ஆசிரியர்களே..

 அன்பை காட்டும் அன்னையாகவும்,
பண்பை வளர்க்கும் தந்தையாகவும், காலம் போற்றும் கடவுளே ஆசான்கள்...
கற்களும் இங்கே சிலையாக, புற்களும் இங்கே மலையாக,
உழியாக என்னை செதுக்கும் கணத்தினில்...
அனைத்திற்கும் சொல்கிறோம் நன்றி,
இவர்களுக்கு சொல்ல ஏது நன்றி...?
என்னை நான் அறிய எனக்குள் என்னை ஏற்றும்
எந்தனது ஏணியே....
இயற்கையும் எதையோ எதிர்பார்த்து  இருக்கையில்,
எதையும் எதிர்பாரா தோள்களை தூணாய் ஏந்தி, துயரம் நீக்கும் தூரிகையாய் நீ மட்டும்....
எம்மை கரையேற்றி அழகு பார்த்த அவர்கள்,
இன்னும் நீரிலேயே நீச்சலடித்த வண்ணம் ஏனோ....
பதவிகளும், பட்டங்களும் 
மரங்களாய் இன்று,
நீ என்னுள் இட்ட கல்வி என்னும் விதையால்....
இவ்வரிகளும், என் கவிகளும் உருவாகும் இடம் எனதெனிலும்,
உருவாக்கிய இடம் உனதே 
என்றும்....!

     - மாதவன் கவிச்சிதறல்

0 Comments