தெய்வ திருமகள்(ன்)

பெயர்
அன்பு ❤️ மட்டும்
        அருண்

தலைப்பு 
சமூகத்தால் ஒதுக்க பட்டவள்

தீண்டாமை எங்களால் பிறந்தது அல்ல
இந்த சமூகத்தால் பிறக்கப்பட்ட தீண்டாமைக்கு பழியாக்கப்பட்டவள் நாங்கள்...
நாங்களா கேட்டோம் இது போன்ற ஓர் பிறவி

மனித வாழ்க்கையில் இருந்து ஒதுக்கப்பட்டவள்
ஒற்றுமையாக வாழ வழியின்றி தனியாக்கபட்டவள் 
நாங்களா கேட்டோம் இது போன்ற  ஓர் பிறவி

ஆண் பெண் என
இருவர் மத்தியில்
இருந்தும் 
ஓரம் கட்ட பட்டவள்
அனைத்து சமூகத்தாலும்
அசிங்கப்பட்டவள் நாங்களா கேட்டோம் இது போன்ற ஓர் பிறவி

தாய் தந்தை இருந்தும்
அனாதையாக
ஆக்க பட்டவள்
சொந்த பந்தம் இருந்தும்
ஒரு வேலை உணவின்றி ஒதுக்க பட்டவள்
நாங்களா கேட்டோம் இது போன்ற ஓர் பிறவி

இறைவன் எங்களை படைத்தான்..

இருப்பவன் வாழ்க்கையை சிதைத்தான்

சிதைத்தவன் விழித்தான்

சிதைபட்ட நாங்கள் 
விழிக்க முடியாமல் போனதும் ஏனோ.. 
நாங்களா கேட்டோம் இது போன்ற ஓர் பிறவி

நாங்கள் பிறக்கும் போது ஆணாக பிறந்தோம்
வளர்ந்து வரும் பொழுது பெண்ணாக வளர்ந்தோம்
யார் தவறு ??????
நாங்களா கேட்டோம் இது போன்ற ஓர் பிறவி

அந்த பாழாய் போன இறைவன் படைப்பில்
மாட்டி தவிப்பது நாங்கள் 
எங்கள் மார் மீது எட்டி  உதைப்பது நீங்கள்

தாய் தந்தை இருந்தும்
சொந்தம் பந்தம் இருந்தும்
ஒரு வேலை வயிற்று பசிக்காக  நாங்கள் தெரு தெருவாக ஓடுகிறோம்
தெரு நாய்  போல சுற்றுகிறோம்
நாங்களா கேட்டோம் இது போன்ற ஓர் பிறவி 

பேருந்தில் கூட எங்களுக்கு இடம் தர மறுக்கின்றனர்..

இடம் இருந்து நாங்கள் அமர்ந்தாலும்
பலரும் அருகில் அமரவும் வெறுக்கின்றனர்...
நாங்கள் அப்படியென்ன
தீங்கு இழைத்து விட்டோம்....
நாங்களா கேட்டோம்
இது போன்ற ஓர் பிறவி...

கவிதைகளில் கூட ஆண் பெண்களுக்கு மட்டுமே இடம் தந்து எங்களை  ஒதுக்கி வைக்கப்பட்டதும் ஏனோ நாங்கள் மூன்றாம் இனத்தவர் என்பதல் தானோ
நாங்களா கேட்டோம் இது போன்ற ஓர் பிறவி 

ஏ மனித மனமே
எங்களிடம் இருப்பது நல்ல குணமே. 

உன்னை போல் பொறாமைக்கொள்ள
வில்லை
உன்னை போல் வஞ்சகம் செய்யவில்லை
உன்னை போல்
ஒதுக்கி வைக்க வில்லை
நாங்கள் இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்கிறோம்

எங்களை சிதைத்து விடாதே
உங்களிடம் இருந்து ஒதுக்கி விடாதே

எங்களுக்கும் மனம் உண்டு அந்த மனதில் பல பல ஆசைகளும் உண்டு

உங்களிடம் கூடி வாழ முடியவில்லை
நாங்கள் கூட்டு பறவையாக வாழ்ந்து செல்கிறோம் 

எங்களை வாழ விடு
இல்லையெனில்
மண்ணோடு மண்ணாக மடித்து விடு மடிந்து போகிறோம் மறந்து போகிறோம்
இந்த பாழாய் போன உலகத்தை விட்டு
சுதந்திர பறவையாக....

இவள் ஒதுக்க பட்ட இனத்தவள்

@⁨Kamu pillai Sis⁩

0 Comments