பெயர் : ஜெயந்தி. G.D.
முதலிடம்
தலைப்பு : சிறகை விரிக்கும் நேரமிது
கருவறை சிறையில் உனை
பொக்கிஷமாய் காத்தேனடா!
கைப்பேசி சிறையிலிருந்து
எப்படி மீட்பேனடா!!
ஐம்பூதங்களுடன் நீ கூத்தாடும் பருவமிது…
உன் ஐம்புலன்களை நீ அடக்கியதேனடா??
மைதானம் உன் கால் பதிய ஏங்குமடா கண்ணே!
சூரியனும் உன் முகம் காண சுறுசுறுப்பான்!!
கருங்குயிலோசையை நீ செவியுணராயோ??
காற்றெனவே கூண்டை விட்டு வெளியே வா!
ஒன்றாய் சிறகடிப்போம்!!
@Kamu pillai Sis @Sowbarnika Pratibha
0 Comments