சங்கவி சகி
நாமக்கல்
தலைப்பு : என் சொந்தங்கள்
உருவம் உயிர்பெற
கருப்பை தந்தவள் அம்மா
உயிரை விந்துகளாக
உருமாற்றிய அப்பா
கண்டிப்பை பாசத்தோடு
ஊட்டிய தாத்தா
உறக்கத்தை கதையாக்கி
போத்திவிட்ட பாட்டி
செல்லமே தங்கமே என்று
தாலாட்டிய இன்னொரு தாய் சித்தி
உடன் விளையாட மீசை வைத்த குழந்தையாக சித்தப்பா
இரத்தம் பெற்ற இரத்தினமென
சீராட்டும் தாய்மாமன்
எதையும் விட்டுதந்து
ரசிக்கும் அண்ணன்
அழுகை மந்திரம் போட்டு
சாதிக்கும் தங்கச்சி
கண்களால் பேசும் மொழி
கற்றுத்தரும் காதலன்
திசையில்லா படகுக்கு
துடுப்பாக உடன் வரும் கணவன்
சங்கிலி தொடராய் பிணைந்து
உறவுகளோடு வாழ்க்கை நகர்கிறது!!
@Arun @Kamu pillai Sis
0 Comments