தலைப்பு;; எழுதுகிறேன் ஓர் காதல் கடிதம்
அன்பே என் அன்பே..❤️
நீ இங்கு நலம்..❤️
நான் அங்கு நலமா..❤️.
எழுதுகிறேன் ஒரு கடிதம்..✍️
உனக்காக ஒரு உயிர் இங்கே
துடித்துக் ❣️கொண்டு இருப்பது
உனக்கு ஞாபகம் இருக்கிறாதா..
கடிதம் எழுதும் முறை காற்றோடு
போனதே..
அலைபேசியில் அழைத்து
ஆயிரம் முறை
அன்பை பரிமாறிக் கொண்டாலும்
அதை காகிதத்தில் வடிக்கும் போது
நினைவுகள் கல்வெட்டாய் பதியும் மாயமென்னவோ என் மாமனே!!
தொலைவில் நீ இருக்கும்
போது என் கடிதத்தின் வரிகள்
வடிவில் நானும் உன்னுடன்
இருப்பேன் அதனால் தான் எழுதுகிறேன் ஒரு கடிதம்✍️
அன்பிற்கு ❤️அளவுகோல் இல்லை
என் அன்பை வடிக்க காகிதத்தில் இடமும் இல்லை!!
வானளவு கொண்டது என் காதல்❤️
அதை வடிக்க அந்த வானத்தையே
வளைத்தாலும் வரிகள் மீதமிருக்குமே
என் மன்னவனே!!
தனிமையில் தவிக்கிறேனே
என் மாமனே!!
உன் நினைவுகளை மட்டும்
சுமந்து கொண்டு.. !!
தனிமையும் நினைவும்
இனிமையாக நனவாக்க ஓடிவா
என் மணாளனே..
எழுதுகிறேன் ஒரு கடிதம்✍️❣️
மீண்டும் எழுதுவேன் ஓர் கடிதம்✍️❤️
கவிதாயினி த சுமதி தசரதன் சென்னை
0 Comments