அமிர்தகவி
சேலம் மாவட்டம்
பங்கேற்பாளர்
பிறை நிலவாய் அவள் முகம்
செந்நிற சலதியோடு சேற்றின்மேல் சிறு பிரம்மாகளின் ஜாலியான ஹாலிபண்டிகை...
வண்ணத்து பூக்களின் கண்கவர் அணிவகுப்பு..
இன்னிசை குயிலிகளின் சங்கீதா தொகுப்பு.. இனியவளின் வருகைக்கு....!
விடுபட துடிக்கும் கைதிகள் இடையே நான் சிறைப்பட துடித்தேன் பெண்ணே உன் இதய சிம்மாசனத்தில்....
உலக அதிசயங்களை எட்டாக எழுத சொன்னேன்.. ஆம் நீ வாழும் ஓலை குடிசையயும் இரண்டாம் தாஜ்மஹாளாக சேர்த்து...!
உன் முகமும் வென்னிலவும் ஒன்று போல் தெரிந்தது...
பின்பு தான் புரிந்தது உன் வீட்டு சிசிடிவி கேமரவின் பதிவுகளை திரைவானில் ஒளிபரப்புகிறானோ இறைவன் என்று...??
இருந்தும் மாதம் ஏன் ஓர் முறை மறைக்கிறாய் வானிலே தெரியவந்தது.. மாத மின்னனைப்பு என்று செய்தி தாளிலே...
எது எப்படியோ உன்னை விரும்பி ஓடி வந்தேன் காதல் சொல்ல... இடுப்பு சுளுக்கி எழுந்து கொண்டேன் படுக்கையில் மெல்ல... விழித்தவுடன் புரிந்தது என் காதல் கனவு என்று புரிந்தது....
@Arun
0 Comments