பிறை நிலவாய் அவள் முகம்

ஆர்.ஜே. சாரா 
இலங்கை

இரண்டாமிடம்

தலைப்பு : *"பிறை நிலவாய் அவள் முகம்"* ( என்னவனின் பிறை முகம் )

என்னவனின் முகம் பார்த்தால் நிலவொளி கூட தோற்றுப்போகும் !

என்னவன் எனக்காக பிறந்தவன் பிறை முகம் அவனின் முகம் !

இரவு வானில் நிலாவின் வருகை தான் உலகுக்கே வெளிச்சம் கொடுக்குமாம் !

என்னவனைப் பற்றி நினைத்தாலே பல கவியொளி என்னுள்ளே ஊற்றெடுக்கும் !

என்னவனின் பிறை முகம் பார்க்கக் காத்திருக்கிறேன் விழியின் வழியே !

என்னவனே உன் கள்ளமில்லா புன்னகை போதும் பச்சிளம் குழந்தைகள் கூட....

உன் அன்புக்கு அடிமையாக உன்னையே சுற்றி சுற்றி வருகிறார்கள் உன் புன்சிரிப்பை பார்த்தே !

அப்படியிருக்க  என் இதயம் மட்டும் எப்படி ஒருநிலையில் இருக்குமோ !

நீ நெருங்கி வரும் வேளையில் அன்பாக என்னுள் தாக்கங்கள் புரிய வைக்கின்றாய் !

சில வேளைகளில் மறைந்து சென்று என் உயிரையே கொள்ளை  கொள்கிறாயே நியாயமா !

உன் பிறை நிலா முகம் காண துடிக்கும் என் இதயத்தை எப்படி புரிய வைப்பேன் உனக்கோ !

என்னவனே எனக்காக பிறந்தவனே வந்துவிடு நித்தமும் உன்னை எனக்குத் தந்துவிடு !

உன்னை கானும் தருவாயில் மட்டுமே என் வாழ்வில் வசந்த காலமாய் நித்தமுமே !

உன் முகம் என் இதயத்தில் இப்படி பச்சை குத்தியது போல் பதிய வைத்தாய் !

உன் முகம் என்றும் எனக்கு பிறை நிலா தான் உயிரே மறவாதே வந்துவிடு !

@Arun 
@Kamu Pillai

0 Comments