பெயர்:- தனிமையின் தாரகை நிஷா.
தலைப்பு:-
"என்னை சுற்றி"
🌟 விந்தணுவை விதைத்து
உதிரம் கொடுத்த உறவும் உண்டு...
🌟 உதிரத்தை உரமாக்கி
உயிர் கொடுத்த உறவும் உண்டு...!!
🌟 அறிவை பெருக்கி
அனைத்தையும் கொடுத்த உறவும் உண்டு..!!
🌟 மகிழ்ச்சியை மட்டுமே மன(ண) ம் பரப்பிட செய்யும் உறவும் உண்டு...!!
🌟 வாழ்வில் ஏற்றம் காண
ஏணியாய் இருக்கும் உறவும் உண்டு...!!!
🌟 தேவை தீர்ந்தது என எச்சில் இலையாய் தூக்கி எறிந்த உறவும் உண்டு...!!
🌟 கண்டதையும் எதிர்பாராமல் காதலித்த உறவும் உண்டு....!!
🌟 எது செய்தாலும் எதிர்க்கும் எதிரி எனும் உறவும் உண்டு...!!
🌟 இனித்திடும் இனிப்பாய் சில இணைய வழி உறவும் உண்டு...!!!
🌟 கவலைகள் மறக்கடிக்க
கடல் அன்னை உறவும் உண்டு...!!!
🌟 தினம் தினம் பேசி மகிழ
ரோஜா செடி எனும் உறவும் உண்டு...!!!
🌟 சோகங்கள் எல்லாம் பகிர்ந்து கொள்ள நிலவு எனும் உறவும் உண்டு...!!
🌟 நித்திரை தொலைக்கும் நேரம் உறங்க வைக்கும் இசை எனும் உறவும் உண்டு...!!!
🌟 அத்தனையும் தாண்டி
என்னை அழ வைக்காத
அமைதியான தனிமை எனும் உறவும் உண்டு....!!!
@Iyarkaiyin kaarigai💙
@Abinesh Sir
0 Comments