தலைப்பு::மீண்டு வருவாயடா !
கண்ணே கனியமுதே
பால் மணம் மாறாத பாலகனே
கடலன்னை உனை அரவனைத்ததேனடா
முத்தே முத்துசரமே
முத்து எடுக்க நீ மூழ்கியதேனடா?
அன்னையின் அழுக்குரல் கேட்டால்
ஓடிவந்து கண்ணீரைத் துடைக்கும்
தென்றலே இன்று காற்றோடு
கலந்தேனடா..
அலைபேசியில் அழைப்பை
ஏற்றதினால் உன்னை மறந்தேனோ?
மாமன் வாங்கி தந்த மல்லிப்பூ தொட்டில் இன்னும் வாடவில்லையடா
நீ என்னை வாடவைத்ததேனடா..
உன்னால் குளிர்ந்த என் வயிறு
இன்று அக்னி போல் எரிகிறதடா..
பார்போற்றநீ வாழ நினைத்தேனடா
பாவியாகி போனேனடா
பூமி தாயின் தோளில் சாயவா
உன்னை என் வயிற்றில் சுமந்தேன்.
யாராயினும் .
இது போல் வேதனை வேண்டாமடா.
புத்தரசோகத்தை தாங்கும் சக்தி
அந்த புத்தனுக்கும் கிடையாதடா!
இதெல்லாம் கனவு என்று
மீண்டு வருவாயா?
என்னை மீட்க வருவாயா?
என் கண்மணியே;
கவிதாயினி த சுமதி தசரதன் சென்னை
தயவு செய்து இதுபோல் ப(குழந்தை இறந்த மாதிரி ஆன) புகைப்படம் வேண்டாம் மா)
0 Comments