கோலோச்சி

பெயர் : *நிதர்சண கவிஞன் ரஹ்மான்*

முதலிடம்

தலைப்பு : *கோலோச்சு*

பைந்தமிழ் அமுதின் தேசமெனும் புகழுரைத்ததே.....!!

நீதிஅரசனும் செவிமடுத்திட வேண்டி கோலுன்றாய்....!!!

வேளிர் நீயோ மணிமகுடமிட்டு திகழ்ந்திட 

செங்கோலிட்டு தேசம் பரந்திடுதே புகழ்யாவும்....!!!!!

ஏட்டுச்சுவடுகளும் நின் புகழிடத்ததாக வரிதொடுக்க....!!!!

கொற்றவன் ஆட்சி கொலைமேற்கொண் டாரிற் கொடிதே.....!!!

கொடுங்கோலிட்டு முன்காணா உயிர் குடித்ததே....!!!!!

குடிகள் யாவும் வியந்தோனை நோக்க...!!!

வான்னோக்கு மாரி மன்னவன் உலகெல்லாம்....!!!!!

செங்கோன்னோக்கி வாழும் குடிகளே...!!!

மறுகணம் பொருளுடைத்து அழைக்கழிக்கும் தேசமா இது.....????

வள்ளுவனின் வாக்குரைத்து எழுத்தாணி தெரித்திடுதே.....!!!!

மூவேந்தர் குலமாம், ஐந்திணை பரப்பாம்....!!!

எட்டுத்திக்கும் அரசாணை எதிரொளிக்கும் கோலோச்சு....!!!

நின்கவியுரைத்த பெருமக்கள் யாவும் கவிபாட....!!!!

கொற்றவன் புகழ் ஓங்குக... தலைதோங்குக.....!!!!!

முடிசூடா கோமானும் செங்கோலாச்சி வேண்டிடுவே.....!!!!

ராஜ குல மங்கையரும் மயங்கிடுவாளே....!!!

போர்த்தொடுத்து நின்றவனும் கூர்வாழுக்கு இரையாகிட....!!!!!

தலையிழந்து மண்ணில் மடிவான் கொடுங்கோலாச்சி கோமான்.....!!!!

கை வேறாய் காலூன்றி இரத்தஆறுகளோட....!!!!

கழுகுக்கூட்டங்கழும், பச்சிகளும் ஒருசேர மொய்த்திடுதே....!!!!

நாவில் தவிழ்ந்தோடும் தமிழ் அமுதே....!!!!

நின் கோன் புகழெடுத்து நாடுதழுவட்டுமே....!!!!

கொற்றவன் கோலோச்சு வையகம் நிரம்பட்டுமே....!!!!!!

@⁨Iyarkaiyin Kaarigai⁩ 
@⁨Arun⁩

0 Comments