*காம பசியும் குப்பை தொட்டியும்*
பங்கேற்பாளர்
*பெத்து போட்டவ எங்க இருக்காளோ...*
*பேரம் பேசுனவே எங்க இருக்கானோ...*
*தொட்டு தூக்க கூட ஒரு ஆள் இல்ல...*
*அம்மான்னு சொல்ல கூட வாய் வரல...*
*ஓ "சொகத்துக்கு" மட்டும் மெத்தைய தேடுனயே...*
*என்ன "பிரசவிக்க" மட்டும் குப்பைய தேடுனது நியாயமா...*
*பசிக்கு அழுதனோ, பயத்துல அழுதனோ தெரியல...*
*ஊரே திரும்பி பார்த்துச்சே கல்நெஞ்சக்காரி உனக்கு மட்டும் கேக்கலையா...*
*"வேசி மகளேனு" ஊரே வெறுத்தப்ப...*
*"மஹராசி மக" மட்டும் ஏந்திக்கிட்டு போனாளே...*
*குப்பையில் கிடந்த இந்த "பிண்டத்த" எடுத்து வந்த மஹராசி இடையிலேயே விட்டுப்புட்டு போனது ஏனோ...?*
*திக்கும் தெரியல திசையும் தெரியல...*
*சுத்தி பாத்தா ஒண்ணுமே புரியல...*
*ஓட்டு கேட்டு வந்தவகிட்ட ஒட்டுத்துணி கேட்டேன்...*
*பத்து துணி தச்சுத்தந்தான் அவன் கட்சிக்கொடி கலருல...*
*அஜ்சு நிமிச சொகத்துக்கு போனது ஓ குத்தமா...*
*அரைகுறையா வாழுறனே இது ஏ குத்தமா...*
*பசிக்கு கையேந்துனா ருசி பாக்க வராங்க "பாவி பசங்க"...*
*பல்ல கடிச்சுக்கிட்டே என் "தேகம் கசங்க"...*
*என்னதான் வேசி மகளா இருந்தாலும்...*
*எந்த வேசியோட மகனு தெரியாமலே போச்சு அம்மா...*
*ஏ வாழ்க்கையும் வெறுத்தாச்சு அம்மா...*
*க.அபினேஷ் (Mr.True_heart 💙)✍️*
0 Comments