கோலோச்சு:-
பங்கேற்பாளர்
செங்கோல் அதிகாரம் கொண்டு மக்களை சந்தோஷத்தில் வைத்து விட்டதால் செம்மை ஆட்சி...
செங்கோல் ஆட்சி...
செங்கோல் கொண்டு மக்கள் கேட்கும் உரிமைகள் கூட பறிக்கப்பட்டு அடிமை படுத்துவதை மட்டுமே அதிகம் காட்டுவது கொடுங்கோல் ஆட்சி...
எழுதுகோல் கொண்டு அதிக கவிதைகளை எழுத்தாளர்கள் இங்கே பதிவு செய்தாலும்...
அதற்காக அங்கீகாரம் கிடைக்காமல்
கேட்கும் உரிமையை எழுது கோல் கொண்டு கேட்கப்பட்டாலும்....
அதற்கான அங்கீகாரம் சரியாக கிடைப்பது இல்லை என்றாலும் கேட்கும் உரிமை பறிமுதல் செய்யபட்டு வெளியேற்றப்படுவது சிறந்த ஆட்சி இல்லையே...
கேட்கும் உரிமைகள் வெளிப்படுத்தும் போது சிறை கதவுகளுக்கு சில அமைச்சர்களிடம் மட்டுமே திறவுகோல் கொடுக்கப்பட்டு மூடப்படுகிறது ....
கேட்பவர்கள் உரிமை மதிக்கபடாமல் வெளியேற்றப்பட்டு தண்டனை தருவது எப்படி சந்தோஷமாகும் உரிமை கிடைக்காமல் கொடுங்கோல் ஆட்சியில் உரிமை பறிக்கப்பட்டு இருப்பதை விட சுதந்திரமாக இருக்க நினைத்து உங்கள் கொடுங்கோலை உங்கள் கையிலே கொடுத்து விட்டு...
என் எழுதுகோல் மட்டுமே நான் எடுத்து செல்கிறேன் நன்றி வணக்கம்....
கவிதையின் காதலன் பாண்டி..
0 Comments