படக்கவிதை பாலியல் தூக்கு

பெயர் :- சா.கிருஷாந்தி 

தலைப்பு :- பாலியல் தூக்கு 



பச்சை குழந்தை அவள் 
பள்ளி போகும் தேவதை அவள் 

யார் கண்களுக்கு அவள் 
வேசியாக தெரிந்தாளோ

காமம் கொண்ட கண்கள் அவளிடம் 
கருணை கொண்ட உள்ளம் என நாடகம் நகர்த்தியது 

நடிக்கவும் தெரியாத நடிப்பின் ஆழம் புரியாத 
அந்த பிஞ்சு மனம் 
என்ன அறிந்து இருக்கும் 

அந்த காமுகன் பசிக்கு இரையாக 
வாழ்க்கையை தொலைத்து விட்டதே 

பாலினும் வெண்மை குணம் 
கொஞ்சும் குறும்புகள் 
இன்று சவபெட்டிக்குள் 
புதை பட்டு போக 
என்ன பாவம் செய்ததோ 
தெரியவில்லை 

பெண் குழந்தை என தெரிந்தும் 
இந்த சீர் கேட்ட சமுதாயத்தில் 
கவனம் இன்றி விட்டது 
பெற்றவர் தவறு என 
குற்றம் கூறவோ முடியும் 

குழந்தையின் சிரிப்பை  காமம் கொண்டு சீரழித்த நயவஞ்சகன் இன்னும் தண்டிக்க படவில்லையே 
இதை அரசு தவறு என
குற்றம் கூறவோ முடியும் 

மனிதம் மறந்த மனிதன் வாழும்
இந்த மனித பூமி இனியும் 
நிலைப்பதில் 
என்ன அர்த்தங்கள் கண்டான் 
அந்த இறைவன் 

பச்சிளம் குழந்தை ஆண்மை தரும் வலி  தாங்குமா
அதை தரும் ஆண்மை நியாயம் தான் ஆகுமா 

குழந்தை குமுறல்களில் இன்பம்
 காண துடிக்கும் இதயம் துடிப்பற்றது 
கண்கள் இனி இருட்டறையில் 
முடக்கப்படும் 
கால்கள் நடக்க மறந்து நடுங்க துவங்கும் 

வாழ்க்கை நரகம் போல் தெரியட்டும் 
இன்னும் இன்னும் எத்தனை துன்பங்கள் இருக்கிறது 
எல்லாம் அவனுக்கே உரியது ஆகட்டும் 

பெண் குழந்தைகளின் வாழ்க்கை பறித்தவன் 
வாழ தகுதி அற்றவன் 

நிச்சயம் இறைவனால் தண்டிக்க படுவான் 

மனிதம் மறக்காத நெஞ்சங்களே 
எம்மால்  முடிந்த வரை 
குழந்தை பாலியல் தவறை தடுப்போம் 
மீறும் மிருகங்கள் அரசால் இல்லாவிட்டாலும் 
இறைவனால் இல்லாவிட்டாலும் 
அழிக்கப்பட்ட பெண்மையால் 
என்றோ ஒரு நாள் தண்டிக்க படுவான் 


Insta id :- krish_ashiq

@⁨Kamu pillai Sis⁩ 
@⁨Barathi Pratibha⁩

0 Comments