பெயர் : ஜெயந்தி. G.D.
முதலிடம்
தலைப்பு: நிறைவேறாத ஆசைகள்!
நிறைவேறாத ஆசைகளோ...பல நூறு
ஈடேரிய எண்ணங்களோ…..சில நூறு
மெய்ப்பட்ட கனவுகள் தருகின்ற ஊக்கமதனை ஊன்றிப்பிடித்து…
மெய்நிகர் கனவுகள் காண்கிறோம்!!
குட்டி குட்டியாய் பல ஆசைகள்
கூடை கூடையாய் கொட்டி கிடக்க
நிறைவேறா என் ஆசைகள் …
நிறைவேறா இக்கவிதை போலவே!!
தொடங்கிய பின் முற்று பெற இயலாமல் திக்குமுக்காடி நிற்கும் இவ்வேளையில்..
எடுத்த காரியம் முடிக்கும் துணிவுற்று
தயக்கமன்றி முன்னகரும் நம் வாழ்வதனைப்போலவே!!
ஆசைகள் தொடரும் நாள்வரையில் தொடரும் பயணம் இனிதாக!
நிறைவேற்றும் முனைப்பு இருக்கும் வரை நிறைவேறும் கனவுகள் இனிதாக…
கனவுகளுக்கும் உண்டோ காலாவதி?!
வாழும் நொடிகள் யாவிலும்
காண்போம் கனவுகள் ஆயிரம்!
நிறைவேறா கனவின் பின் செல்கையிலும் நிறைவேற்றியவற்றை மறக்காமல்
வாழும் காலம் முழுமைக்கும்
அனுபவித்து அகமகிழ்வோம்!!
@Barathi Pratibha @Sowbarnika Pratibha
0 Comments