நிறைவேறா ஆசைகள்

பெயர் :- 
கவிதையின் காதலன் பாண்டி 
இரண்டாம் இடம்

 தலைப்பு:- 
நிறைவேறாத  ஆசைகள்

நிறைவேறாஆசைகள் நித்திரையில் நினைவுகளோடு பேசிடுதே...
 
நித்தமும் வண்ணங்களோடு எண்ணத்தில் பூத்திடுதே...
 
நிலா வரும் வேளையில் நிலவோடு  தேவதை அவள் வரவே ஆசையே... 

வான்மகள் பிறை நெற்றியில் முதல் முறை முத்தமிட ஆசையே...
 
சுட்டுவிரல் பிடித்து உலகம் சுற்றிவர ஆசையே... 

கனவில் அவள் வந்திடும் தருணத்தில் சூரியனை அதிகாலையில் தூங்க வைத்திட ஆசையே... 

துயில் கொள்ளும் அவள் இமை தூரிகையில் என் சுவாசக்காற்றால் வெப்பமிட ஆசையே... 

வெப்பமான என் இதழ்கள் தணித்திட  அவள் இதழின்  பனிகூழ் சுவைத்திடவே ஆசையே... 

இதழ்களோடு இதழ்கள் கொண்டு  இரவு முழுதும் சண்டையிட ஆசையே... 

சண்டையில் இதழ் காயங்களால் என் இதழின் புது வானவில் சிவப்பை அவள் விழி கண்ணாடியில்  கண்டிடவே ஆசையே...

நான் வைத்து அவள் கூந்தலில் வலம் வந்த மல்லிகையை  நானே கட்டிலில் கட்டி அணைத்தபடி விரல்கள் பாடாமல்  உதிர்த்திடவே ஆசையே... 

இத்தனைக்கும் முதன்மை அவள் கழுத்தில் மூன்று முடிச்சு நான் போட்டிடவே ஆசையே.. 

90 kids தலைமுறையில் நான் பிறந்ததால்  இதுவே நிறைவேறா பேராசையே...

@⁨Sowbarnika Pratibha⁩ @⁨Kamu pillai Sis⁩

0 Comments