தலைப்பு: விளையாட்டு வீரனின் ஆசை
பங்கேற்பாளர்
பெயர்: கவித்தென்றல் கவியானந்தம் BCA
போர்க்களத்திற்கு முயற்சித்தேன்
நாள்தோறும் பயிற்சித்தேன்
பயிற்சி எல்லாம் பாலானது
என் முயற்சி வீணானது
வெற்றியினை பறிக்க ஓடினேன்
வேதனை தடுக்கி விட்டது
இரத்த காயம் ஏற்பட்டது
வீழ்ந்து கிடக்கவில்லை
இறந்த பிணம் நான் இல்லை
என்ற எண்ணம் எண்ணத்தில் உண்டு
போகவில்லை துவண்டு
கலங்கவில்லை தோல்வியை கண்டு
இன்னும் கூட வாய்ப்புண்டு
என்பதை எண்ணத்தில் நிறுத்தி
தோழ்வியை தகர்த்து
வெற்றியை துரத்தி முயற்சிக்கிறேன்
முடியும்வரை அல்ல
மண்ணில் மடியும் வரை
@ Bharathi baski
@ kamu pillai
Insta: @kaviking47
0 Comments