மாதவன் கவிச்சிதறல்
தலைப்பு : என் உயிருக்கு காதல் கடிதம்
எனதவளே..
ஏங்கிய என் இதயத்திற்கு இரக்கம் இரைத்தவளே,
ஏக்கம் தனை தவிர்த்து என்னுள் தாக்கம் தந்தவளே..
சொந்தம் என சொல்ல பலர் இருந்தும்,
சொர்க்கம் அதை காட்டி சொந்தமானவளே,
அன்பு என்ற சொல்லின் அர்த்தம் தனை அறமாய் எனக்கென அளித்தவளே,
பள்ளி வாழ்க்கையில்,
பருவம் தெரியா வயதில் பூத்தது காதல் இல்லையாம், மடையர்கள் கூற்று,
பள்ளி முடிந்த கணம்,
புரளும் மனம் புரியாத ஒன்றாய்,
தேடி திரிந்த கண்களுக்கு நினைவு மட்டுமே பதிலாக,
தேவி அவள் நினைவுகள் வாழும் எந்தன் உயிராக,
தொலைத்ததாய் நினைத்த சொந்தமவள், அழைப்பு விடுத்தாள் முகநூலில், முகவரி தேடியவாறு..
வணங்கிய தெய்வமோ,
வீறுகொண்ட நெஞ்சமோ,
அமிர்தமாய் அவள்,
தாகம் கொண்ட எனக்கு..
கோகிலம் அவள் கோபுரமாய் என்னுள் எப்படியோ...?
ஆனந்தம் இங்கு நிலையில்லையே, ஆண்டவன் என் இன்பம் கண்டதாலோ என்னவோ,
கானல் நீராய் எம் காதல்
கரையேற மறுப்பது நியாயமா?
பிஞ்சாய் பேசிய அவள்
பிதற்றுவதை மனமது ஏற்குமா?
பாடல் வரிகள் பாரமானது,
இடைவெளி தூரமானது,
நினைவுள் சுவடுகளானது..
எரிந்திட்ட இன்பங்கள் குடிவாழ துடிப்பதேனோ,
வரிகள் எனும் கவிதைகளாய்,
ஏடுகள் தீர்ந்தும், எண்ணங்கள் தொடர்வதேனோ.. ??
வாழும் உன் எண்ணங்கள் தோல் கொடுக்கும்
வாழும் என் வாழ்வின் வண்ணகளாக...
மாதவன் கவிச்சிதறல்
(கரூர் மாவட்டத்திலிருந்து).
@Arun
@Kamu pillai Sis
0 Comments