மாதவன் கவிச்சிதறல்.
இரண்டாம் இடம்
அண்ணாவும் பெரியாரும் :
🏏 இரண்டு நூற்றாண்டு கண்ட தலைவன்,
ஈரோடு ஈன்றெடுத்த புதல்வன்..
🏏 இறைவன் அனுப்பிய இறை நம்பிக்கையில்லா மனிதன்,
திராவிடம் எனும் இயக்கத்தின் இணையற்ற கழகன்..
🏏 ஆயுதமின்றி போர்வாள் வீசியவன்,
அறம் காக்க அனைத்தையும் துறந்தவன்,
🏏 மூடநம்பிக்கைக்கு முட்டு,
இறை நம்பிக்கைக்கு கொட்டு..
🏏 உயர் சாதி பிIறப்பாயினும்,
சாதி அழிக்க அடிக்கல் நாட்டியவன்..
பிறக்கையில் மூடனாகினும்,
வளருகையில் மனிதனாய் மாற்ற துடித்தவன்..
🏏 இன்றைய அரசியல் கட்சிகளின் ஆணிவேரே,
அனைத்து அரசியல் வாதிகளின் ஆணித்தூரே,
உமை போற்ற ஏது சொற்கள்,
உகந்ததாய் நீ எடுத்த பாதையில் பல முட்கள்..
🏏 சாதிக்கு எடுத்தான் சாட்டையை,
அழித்தான் பார்ப்பனரின் சேட்டையை....
🏏 பெண்களை மீட்க ஆர்ப்பாட்டங்கள்,
காத்தவர்களை காக்க போராட்டங்கள்..
🏏 அறிஞர் அண்ணா, அறிஞர்களுக்கெல்லாம் அண்ணா..
அரசியல் சாணக்கியன்,
ஆடம்பரமற்ற சாமானியன்,
எழுத்துக்களால் பேசுபவர்,
எண்ணங்களின் எல்லையிவர்..
🏏 கடவுள் ஒருவனே என்றவர்,
பேச்சில் பேரின்பம் கொண்டவர்..
🏏 மேடை பேச்சின் மேதை,
இவர் பேச்சே கேட்பவனுக்கு போதை..
🏏 மொழிக்காக போராட்டம்
தாய் தமிழ் மொழிக்காக போராட்டம்...
🏏 திமுக வின் ஆசான்,
திராவிடத்தின் காப்பான்..
அண்ணாவும் பெரியாரும்
புகழின் உச்சங்கள்..
அடிப்படை சுதந்திர வாதிகள்,
அடக்க இயலா காளைகள்
பகுத்தறிவூட்டிய வேலிகள்
பாமரனுக்கான தூரிகள்...
0 Comments