பெயர் : ஜெயந்தி. G.D.
முதலிடம்
தலைப்பு: பெண்ணியம் எனும் அறம்!
என் இனம் என்ற இறுமாப்பு
சற்றே மிகுந்தவள் இக்காரிகை!
ஆணுக்கு நிகர் பெண்ணா?
எவருக்கும் நிகர் எவருமில்லை!
யாவரும் இங்கே தனித்துவம் வாய்ந்தவரே!!
நுரையீரல் மூச்சுக்காற்றை இரவல் கேட்பதில்லை…
பேதை நீ உன் சுதந்திரத்தை யாரிடத்தில் யாசித்து நிற்கிறாய்??
சுதந்திரம்… அது உன் பிறப்புரிமை!
பேச்சு, எழுத்து, கல்வி, சிந்தனை, உணர்வு, கருத்து, பொருளாதாரம், அரசியலென
யாவும் காத்திருக்கும் வேளையில்
உன் மனச்சிறையில் நீ முடங்குவதா?
மூடர் உன்னை ஒடுக்கி ஒதுக்க
தடைகளை தகர்த்தெறி் தாரகையே!
பிரசவ வலியை பொருப்பவள் நீ!
பிர சவங்கள் தரும் வலியை ஏற்பதுவும் ஏன்!?
கூரிய நகங்களும் பற்களும் ஆயுதமென காக்கும் உனை!
கண்ணீரில் நீ கரையாதே… உன் விழி நெருப்பில் நீ பொசுக்கிவிடு!
விளையாட்டு முதல் வின்வெளி வரை..
கவிதை முதல் காவியம் வரை…
அடுப்படி முதல் ஆராய்ச்சி வரை…
தொடர்ந்து செல் உன் பயணத்தில்
தோளோடு தோள் கொடுக்க தோழர்கள் பலர் உண்டு !நம்பிக்கையுடன் நீ நடை போடு!
வரும் கால சமுதாயம் நம் கையில்…
“இயற்கையின் படைப்பில் யாவரும் நிகரே!”
புகட்டி வளர்ப்போம் அடுத்த தலைமுறையை!
மனிதநேயம் பூக்கும் வேளையில்
வாகை சூடும் பெண்ணியமே!!
@Sowbarnika Pratibha @Kamu pillai Sis
0 Comments