தலைப்பு: பெண்ணியம்
முதலிடம்
கவிதையின் காதலன் பாண்டி
🍁பிரம்மன் படைப்பில் மலரே உயிர் கொண்டு பெண்ணாக வந்தாயோ...
🍁மலரை விட மென்மை குணமும் புன்னகை வெட்கம் பேரழகு...
🍁பூப்படையும் புனிதமும்
தீட்டு என்னும் போது கோபமும் உச்சம் தொடும்..
🍁மென்மையை படைத்து அதில் வலியையும் புகுத்தி கண்ணீர் இங்கே குருதி ஆனது...
🍁குருதியும் இங்கே தீராத கண்ணீரானது...
🍁மறுபிறவிக்காக அவளும் போராடினால் அந்த வரம் கிடைக்காமல் மலடி என்ற பட்டம் வாங்கினாள்...
🍁வலிகள் எப்போதும் வலிகளே அதோடு வாழ்வதே அவள் வாழ்க்கையானது...
🍁புன்னகை செய்வது பூப்படைவதும் மலரின் இயல்புதானே ...
🍁இதற்கு பறித்து விடும் தண்டனை உடனே கிடைப்பது நியாயமா குழந்தை திருமணம் அவர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபமா...
🍁குல விளக்கை ஒளிவீச தடுக்கும் வரதட்சணை இது பல பெண்களுக்கு முதல் பிரச்சனை...
🍁குடிமகனால் நாட்டிற்கு வரும் வருமானமோ
பெண்ணிற்கு தினமும் அவமானம்...
🍁உயிர் என்று நினைத்ததால் தானே வலி சுமந்து உருவம் கொடுக்கிறாள் சிசுவிற்கு...
🍁பலரோ பெண்களை சதை என்று பார்த்ததால் தானே பாலியல் வன்கொடுமை நடக்கிறது...
🍁உன் வாழ்க்கை என்பது போராட்டம் என்றாலும்
பெண்னே நீ போராடினால் உனக்கு மட்டுமே என்றும் கொண்டாட்டம்...
🍁அனைத்து துறைகளிலும்
சாதனை உனக்கு புதிது இல்லை சரித்திரமோ உன் இனத்தின் எல்லை...
@Kamu Pillai @sow karthi
0 Comments