பெயர்
அன்பு ❤️ மட்டும் அருண்
மூன்றாம் இடம்
தலைப்பு
இணையம் எனும் சிறையில் அகப்பட்ட மழலை..
ஏ இளைய சமுதாயமே
ஏன் இந்த கூட்டில் மாட்டி தவிக்கிறாய்
இணைய தளத்தின் கதிர் வீச்சு பட்டு
நாங்கள் கொத்து கொத்தாக செத்து மடிவது போதும்
நீங்கள் ஏன் இதில் மூழ்கி உங்களை நீங்களே அழித்து கொள்கின்றீர்கள்
நான்கு ஐந்து கதிர் வீச்சு வந்தது
முதலே எங்கள் வாழ்க்கை மட்டுமல்ல
உங்கள் எதிர்காலமும் கேள்வி குறி ஆகி விட்டது
இணையத்தை தூக்கி எரிந்து விடு
இன்னல்களை துரத்தி விடு
இரவுகளில் கண் விழிப்பதை நிறுத்து விடு
உன் பார்வை இன்றி போவதை தடுத்து விடு
நாங்கள் பறவையாக பிறந்தாலும்
சிறகு விரித்து பார்க்கிறோம்
நீ மட்டும் ஏனோ
தவிக்கிறாய்
உன் வாழ்கை பயணத்தை தொலைக்கிறாய்
மீண்டு எழு
உன் வாழ்க்கையை
தொடர விடு..
நாளைய சமுதாயம் அழியாமல் இருக்கட்டுமே...
@sapna
@ kumupillai
0 Comments