படக்கவிதை போட்டி

தலைப்பு : உயிரில்லா உயிர் நண்பன்
பங்கேற்பாளர்

நான் சிரித்துப் பேசிட என்னோடு ஓடி விளையாடிட
யாருமில்லா நேரத்தில்
இயந்திர நண்பனாக என் கைக்குள் நீயும் வந்தாய்
உயிர் இல்லா பொருளானாலும் என்னுடன் இருந்தாய் நீ

பசி தூக்கம் மறந்தேன்

கண்கள் இமைக்காமல் உன்னை பார்த்து ரசித்தேன்
பறந்து விரிந்த உலகத்திலே சிறகிருந்தும் மறந்து நானே கூண்டுக்குள் அடைப்பட்டுகிடக்கிறேன்

என் கைக்குள் கைபேசி எனும் உலகமே இருக்கிறது என்று நினைத்து உன்னையே உலகமாக நினைக்கும் உறவுகளை மறந்துவிடாதே அரும்பே....

பெயர் : மு. வள்ளிமுத்துமாலை

@kami pillai
@பாரதி பாஸ்கி

0 Comments