பெயர் : ஜெயந்தி. G.D.
இரண்டாம் இடம்
தலைப்பு : அண்ணாவும் பெரியாரும்
சமூகத்தின் மாற்றம், சீர்திருத்தம், போராட்டம்,புரட்சி, முன்னேற்றமென வித்திட்ட இருமாபெரும் ஆளுமைகள்!
கொள்கைகளால் ஒன்றுபட்டவர்களாயினும்
செயல்பாட்டில் வேறு பட்டவர்கள்!!
தமிழக வரலாற்றில் தங்கள் முத்திரை பதித்து கழகம் வளர்த்த செயல்பாட்டாளர் வைக்கம் வீரர்! வெற்றியாளர் பேரறிஞர்!!
ஏன் எதற்கு என்று கேள்…
பின் பகுத்தறிந்து பார்!
அறிவு விடுதலை செய்…
முற்போக்கு சிந்தனை கொள்!
மூடநம்பிக்கைகளை ஒழி…
சாதிப் பட்டத்தை துற!
சுயமரியாதையை காத்து…
மதுவை விலக்கு!!
பாலின சமத்துவம் போற்று..
தேர்தல் அரசியல் புறக்கணி!
இடம் மறுக்கப்பெற்றவர்க்கு இடத்தை ஒதுக்கிடு!
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் வேற்றுமை துற!!
என்று தான் வகுத்த கொள்கைகளை
துணிந்து செயல்படுத்த போராடி
எதிர்ப்புகளை தாண்டி
விமர்சனக் கணைகளை தாங்கி
முற் படுக்கையின் மேல் கல்லடி பட்டு நீ சாதித்தது என்ன?
கொள்கைகளை மறந்து கொள்கை வகுத்தவனை விமர்சிக்கும் சமூகம் நமது என்பதை நீ மறந்ததுவும் ஏனோ??
போற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்ற பணி செய்து வளர்த்தாய் கழகத்தை!!
பெரியார் வழித்தோன்றிய ராஜியவாதி! பன்முக நாயகன்! தன்னம்பிக்கை ஊற்று! சொற்பொழிவாளர்! கடமை கண்ணியம் கட்டுப்பாடு என வலம் வந்தவர்! சிலேடை, அடுக்குமொழி வித்தகர்!
பேச்சு, எழுத்து, வசனம், நாடகம், திரைப்படமென மக்கள் மனங்கவர்ந்த சூட்சுமதாரி!
ஆட்சி பீடத்தில் வெகு சாமர்த்தியமாக காய்கைள நகர்த்தி
நீ ஆடயதோ சதுரங்க வேட்டை!
மொழிப்போராட்ட வெப்பத்தில் குளிர் காய்ந்து உணர்வுகளை அரசியலாக்கிய பேராசான்!
அகண்ட மதராசபட்டிணம் தமிழ்நாடானது !
தனியாக தேசம் வேண்டி தேர்தல் தடையால் பின்வாங்கி இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றிய மாவீரர்!
மறைவிலும் சாதனை விண்ணை முட்ட!
இன்றும் உங்கள் கிளைகளின் நிழலில்!
அருகு போல் வேரோடி!
நாணல் போல் வளைந்து!
மூங்கில் போல் சூழ்ந்து!
முடிவறியாமல் வாழ்ந்திருப்போம்!!
@Barathi Pratibha @Kamu pillai Sis
0 Comments