தலைப்பு : நிறைவறா ஆசைகள்
பெயர் : அறிவு செவ்வூரான்.
அன்பு கணவனே
என் காதலனே
எத்தனை நாள் காத்திருப்பது உன் வருகைக்காக
எத்தனை முறை
பார்த்திருப்பது உறவிற்காக
எத்தனை முறை
ஏங்குவது உன் கொஞ்சலுக்காக
எத்தனை முறை
விழுவது
உன் கைகள்
தாங்குவதற்காக
எத்தனை முறை
புடவை கட்டுவது
உன் விரல் என்னிடை
தீண்டுவதற்காக
எத்தனை முறை
கதவருகில் நிற்பது உன் நெஞ்சணைப்பிற்காக
எத்தனை முறை தலை சீவுவது உன் விரல்கள் களைத்து விடுவற்காக
எத்தனை முறை
முகம் கழுவுவது உன்னிதழ் பதிப்பிற்காக
எல்லாம் எத்தனை முறை எத்தனை முறை செய்தும்
வாடாத மனம் வாடிப்போனதே
இன்றும் உன் வருகை இல்லை என்று தெரிந்ததும்...
அறிவு செவ்வூரான்.
@Sowbarnika Pratibha
@Kamu pillai Sis
0 Comments