பெயர்:
"பிரபஞ்சத்தின் காதலி"
(VS... நற்பவி)
பங்கேற்பாளர்
தலைப்பு:
சுயநல கூண்டு
******************
கூண்டை பிரித்து கிளியே கூண்டிலடைத்தோம்...!
காட்டை அழித்து இயற்கையை களவாடினோம்...!
குளங்களை மூடி குடிநீரை தேடுகிறோம்...!
மரங்களை வெட்டி நிழலை இழந்தோம்....!
கல்வியை காசாக்கி கடை விரித்தோம்....!
மருத்துவத்தை வனிகமாக்கினோம்...
அரசியலைச் சாக்கடை ஆக்கினோம்....!
மனச்சாட்சியை அடகு வைத்து
ஊழலுக்கு வழி வகுத்தோம்...!
இன்று இறுதியாக வீட்டுக்குள் முடங்கினோம்.....!
ஏன்.....??
செய்தவினை செயல்படுகிறது....!
சுயநல கூட்டுக்குள் அடைந்த கூண்டுக் கிளியாய் அலைகிறோம்.....!
@Sowbarnika Pratibha
@Barathi Pratibha
0 Comments