தலைப்பு : தெய்வத்திருமகள் - திருநங்கை
கால்சட்டை போட்டுவிட்டால் காதணிப்போட ஆசை வருகிறதோ?
மேல்சட்டை போட்டுவிட்டால் மேனியை மூட சேலை வேண்டுதோ?
தலைவாரி பூச்சூடி ஒப்பனை செய்து பெண்ணாகவே வந்து நின்றாய்!
உள்ளுணர்வை ஒத்துக்கொள்ளாத உலக உணர்வுக்காக ஒதுங்கி நொந்து நின்றாய்!
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்ய வேண்டுமாம்!
திருமங்கையாய் நீ பிறந்து வீட்டின் திட்டுக்களால் தீண்டப்பெற்று
தீண்டாமையால். சாலையை சார்ந்து வந்தாய் கைத்தட்டி காசுகேட்டு
காலி வயிற்றை நிரப்பக் கண்கலங்கி நின்றாய்,
ஏன் இந்த வாழ்க்கையென்று ஏளனமாக எண்ணி பார்க்காதீர்கள்!!
குரோமோசோமின் குளறுபடி உன் வாழ்க்கை குழம்பும்படி மாற்றிவிட்டது
இறைமகள் நீயே!! இரையின்றி தவிக்கின்றாயே!
"கஷ்டத்தைத் துரத்துக் கண்ணீரை நிறுத்து தன்னம்பிக்கை கொண்டு தடைகளை
தகர்த்து வீறுகொண்ட வேங்கையாய் வெகுண்டெழுந்து வா விமர்சனங்களை
வீசி விட்டு வெற்றி வாகை சூட வா"
மனதினுள் விதைப்போம்
• 🔥 திருநங்கைகளைக் கேளிக்கையாக்கி கேவலம் செய்யவேண்டாம்
• 🔥 அவர்களைக் காணும்போது குறுகுறு பார்வையால் கொல்ல வேண்டாம்
• 🔥 மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அழிவிக்கு ஆளாவதைத் தடுப்போம்
• 🔥 திருநங்கைகளை பாதுகாக்க வேண்டும் பாவம் பார்த்துத் தனித்து நிறுத்த வேண்டாம்
• 🔥 உயிரணுக்கள் இணைந்துள்ள திருமங்கைகளோடு உலகத்தையும் இணைய வைப்போம்
−சௌமியா.சு
Insta id: soumi_kavithaigal
@Kamu Pillai @Bharathi Baski Sir
0 Comments