என் பார்வையில் எதிர்கால இந்தியா

பெயர் : நிதர்சண கவிஞன் ரஹ்மான்

முதலிடம்

தலைப்பு : *எனது பார்வையில் எதிர்கால இந்தியா*

அஞ்சிடா நெஞ்சம் தொடுத்து ஆயுதம் களைந்து, உறவுகள் இழந்து உழைத்திட்ட உத்தமர்கள் வாழ்ந்திட்ட பூமி.

தோரைகள் எல்லாம் உயிர் மூச்சாய் கொண்டு உழவன் காத்த பூமி....

கருமேகங்களும், கார்முகில் தோட்டத்து பூஞ்சோலைகளும், மும்மாரி பொழிந்திட்டு முத்தமிட்ட பூமி....

குடிசைகளில் மறைந்துள்ள இந்தியா....!!!!

நாட்டின் அனைத்து முன்னேற்றத்திற்கும் வித்திட்டவன் பாமரனே...!!!

அவனை மறந்து உயர்குடியெல்லாம் வயிற்றை பெருக்கிறதே....!!!!

ஒரு வேளை உணவற்று முழு இந்தியாவும் குடிசைக்குள் முடங்குகின்றனவே....!!!!

*இந்நிலை மாறா....????*
*எந்நிலை தொடும் உச்சம்.....!!*

நிர்பயா தொட்டு சபியா வரை ஓங்கும் களியாட்டம்..
நீதி மறந்து போனதேனோ.....!!!!

தலைநகர் தலைகுணிய தற்குறிகளை களையெடு...!!!!

மின்னிடும் பெண்ணியம் அகிலமெங்கும்...!!!

உழவன் படுத்திட தார்சாலைகள் அல்ல...

மதித்திடு... அவனை ...
தரையில் வைத்து மிதித்திட அல்ல....!!!

வித்திட்ட நிலங்களெல்லாம் மலடாய் போக.....
 குத்திட்டு வைத்திடுகிறாயே இடத்திற்கான கல்லை....!!!!

மாற்றிடு.... மாற்றம் கொண்டு புது யுகத்தை....!!!

இளைஞன் கையில் புரண்டிடும் இந்தியா....!!!

வீருகொண்டெலு இளைஞனே....!!!

சுவடில்லா நடந்து முடியும் தேர்தல்களாய்...

மூச்சு திணறா விலை வாசிகள்....!!!!

அடித்துப்பிழைக்கா எசமானர்கள்....

ஜாதி இல்லா அரசியல்....

சிறுநீர் சித்திரம் வரைந்திடா சுவர்கள்....

குப்பை கழிவுகளற்ற வீதிகள்...!!!

பெண்ணியம் போற்றும் ஆண்மகன்கள்...!!!

நீதி மாறா நீதிஅரசர்கள்...!!!!

உழவன் கை முத்தாய் தோரைகள்...!!!

இவை வேண்டும் எந்நாட்டில்......!!!

உச்சநிலை தொட்டு  மிளிரட்டும்.....!!!

எந்தேசம்.....!!!!!

@⁨Kamu pillai Sis⁩ 
@⁨Sowbarnika Pratibha⁩

6 Comments