பெண்ணியம்

பெண்ணியம் (பாரதியும் பெண்ணியமும்)

மூன்றாம் இடம்

பாரதி நீ இருந்திருந்தால்
உன் பெயரில் முடியும் தி!  
"தீ"யாகி பல தீமை செய்யும் பாதகர்களை படுகுழியில் தீர்த்திருக்கும்!!!
உன் எழுத்தில் எழுந்த எழுச்சியானது ஏமாற்றுகாரா்களை எட்டி மிதித்திருக்கும்!!
 பச்சைக் குழந்தைக்கும், பள்ளி செல்லும் சிறுமிக்கும் ,பல்லு போன பாட்டிக்கும் பாதுகாப்பில்லாத நிலைமை, படுபாவிகள் செய்கின்ற கொடுமை.
புதுமைப் பெண்ணெல்லாம் வேண்டாம் பாரதி ,புதைக்காமல் வாழவிட்டால் போதும்.
ஆண் போதைக்கு ஆளான பேதைகள் போதும் பாரதி , இனிமேலாவது மேதைகள் உருவாகிட வேண்டும்.
போதும்! போதும்! பயந்து மிரண்டது போதும் வேண்டும்! வேண்டும் !கொடூரா்களை கொன்று வென்றிட வேண்டும்.
பெண்களை "பூ"வென்று சொல்லிச்சொல்லி புதைகுழியில் புதைத்துவிட்டோம்.
"புயல்" என்று நிரூபிக்கும் காலம் வந்தால் பூமி வென்று காட்டுவோமே!!
புதுமை படைக்கும் புரட்சி பூகம்பமாகப் பிறப்போம்
எழுச்சி செய்து சீண்டும் சீற்றங்களைச் சரித்து சிங்கப்பெண்களாக சீக்கிரம் சிங்க நடையில் முன்னேறி காட்டுவோம்!!!
        - சௌமியா.சு 
          உடுமலைப்பேட்டை
     @⁨Kamu pillai Sis⁩ @⁨Barathi Pratibha⁩

0 Comments