அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

பெயர்:தெ.கவிதாஞ்சலி
தலைப்பு:அன்பிற்குரிய ஆசிரியர்களே

மாதா பிதாவிற்கு பிறகு கடவுளுக்குமுன்பு  குருவையே பெரிதாக வணங்குகிறோம்!!!!!

ஏன் தெரியுமா பகுத்தறிவும்.கல்வியறிவும் ஒழுக்கமும் பண்பாடும் கட்டுபாடும் நேர மேலாண்மையும் ஆசிரியர்களால் மட்டுமே மாணவ செல்வங்களுக்கு கற்று தரமுடியும்!!!

ஒன்றும் அறியா வெற்று காகிதங்களாய் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றோம்!!!!

எங்களை அறிஞர்களாகவும் பொருளியல் வல்லுனர்களாகவும் ஆசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் பல துறைகளில் சாதனை படைப்பவர்களாகவும் உயிர்பிக்க செய்து எங்களை செதுக்கிய கடவுளே எங்கள் ஆசான்தானே!!!!

ஆசிரியரே உங்களால் மட்டும் தான் நாங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் எங்களை பார்த்து பொறாமை கொள்ள முடியாது!!!

ஆசிரியரின் அறிவுரையினால் அறிவை வளர்த்தோம் பண்பை பெற்று அடக்கம் ஒழுக்கம் கற்று வாழ்க்கை நெறிமுறைகளை கற்றோம்!!!

எங்களை சிற்பமாக செதுக்கிய என் அன்பிற்கினிய ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த அன்பு நிறைந்த வாழ்த்துக்களுடனான நன்றிகள்!!

கடவுளுக்கு கல்வி கொடுக்கும் குருவின் பின்தானே உங்களுக்கான தனிமரியாதையை நான் என் உயிர் உள்ளவரை அளிப்பேனே!!!

**குரு வணக்கம்**
**என்றும் அன்புடன்**

Insta id: kavithanjali
@sapna
@கவிஞர் பாரதி பாஸ்கி

0 Comments