மௌன மொழிகள் செப்5-7

தலைப்பு :
 மெளன மொழி

பெயர் :மு. வள்ளிமுத்துமாலை 



அன்பினை பரிமாறி
ஆறுதலாய் தோள் சாய்ந்து
சின்னச் சின்னதாய் சண்டையிட்டு
சீக்கிரமே 
சமாதானம் ஆகி
பிரிவு என்ற வார்த்தைக்குக் கூட இடமில்லாமல் இணைப்பிரியா 
ஓருயிராய் வாழ்ந்தோம்
இன்று ஏனோ ஒரு மாற்றம் உன்னுள்ளே நான் கண்டேன்
பல கேள்விகள் என்னுள்ளே வந்துச் சொல்ல
நீ தந்த வலிகள் மட்டும்
அடி மனதில் தங்கிக்கொண்டு வாட்டி வதைக்கிறது என்னை
விட்டு செல்லமாட்டேன் என்று விலகி சென்றாய்
துணையாக இருப்பேன் என்று சொல்லி தனிமையை எனக்கு பரிசாக தந்தாய்
காரணம் கேட்டால் மெளன மொழியில் பதில் சொல்கிறாய்
அகராதியை அலசி பார்த்தாலும் உன் மெளன மொழியை மொழிபெயர்த்து சொல்லிட யாரும் இல்லையடி 
கண்கள் கூட கண்ணீர் எனும் மொழி பேசுதடி
வார்த்தைகள் இல்லா உன்
மெளனத்தின் மொழி என்னை அனு அனுவாய் கொள்ளுதடி
நான் காணாமல் போகும்முன் உன் மெளனத்தை மொழி பெயர்த்து வார்த்தைகளால் சொல்வாயா
இல்லை
காத்திருந்து காத்திருந்து காணாமல் போவேனா தெரியவில்லையடி பெண்ணே...
            🙏

@sapna @kamupillai

0 Comments