பெயர் : ரூபாஸ்ரீ
தலைப்பு :
✨மெளன மொழிகள் ✨
✨மெளன மொழி
பல நேரங்களில் நம்மை கசப்பான
அனுபவத்தில் இருந்து காக்கும் அழகு மொழி !!
✨மெளன மொழி
சிறு குழந்ததைகள் நம்மிடையே வளரும் போது சிரிப்பும் அழுகையும் மட்டுமே கலந்திருக்கும் அமுத மொழி !!
✨மெளனமொழி
ஆசிரியர் அதட்டலில் கை கட்டி நின்ற போது பயத்தில் ஏற்பட்ட குறும்பின் மொழி !!
✨மௌன மொழி
முதல் காதல் துளிர் விட்ட நேரம்
தரையில் கால் படா
கண் மட்டும் பேசும்
இதய மொழி!!
✨மெளன மொழி திருமணம் எனும் பந்தத்தில் இணையும் போது இருமனங்களுக்கும் இடையில் ஏற்படும் சந்தோஷ மொழி !!
✨மெளன மொழி
தாய்மையின் பரிசாக கருவுற்ற போது சில நிமிட பொக்கிஷ மொழி !!
✨மெளன மொழி
வாழ்க்கையின் இறுதிவரை சூழ்நிலை பொறுத்து நம்மோடு தொடரும் மொளன மொழி இயற்கையின் வரம் !!
@sapna @kamu pillai
2 Comments
Love you dr 😍😍😍
ReplyDeleteஅருமை
ReplyDelete