பெயர் : ஜெயந்தி. G.D.
தலைப்பு : என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்
என் வாழ்வை இனிமையாக்கிய இனியவனே!
உன் காந்தப் பார்வையில் சிறு துரும்பென ஈர்க்கிறாய் எனை!
தூரங்களை கடந்து நேரங்களை மறந்து....
எப்பொழுதும் உன்னருகில்....
உன் அனணப்பின் இருக்கத்தில்...
உன் முத்தத்தின் ஈரத்தில்...
உன் ஸ்ப்பரிசத்தின் கிளர்ச்சியில்...
உன் பார்வையின் ஆழத்தில்...
உன் சிரிப்பின் மோகத்தில்...
உன் காதலின் காமத்தில்...
என்றும் நான் இருந்திடல் வேண்டும்!
உன் நினைவுகளும் கனவுகளும்
என் தனிமைக்கு துணையாக!
நினைவுகளுடன் நீயும்
கனவுகளுடன் நானும்
பின்னி பிணைந்து இருப்போம்!
நேரில் காணும் வரை
ஆசை பொறுத்திருப்போம்!
உன் ஆசை முத்தங்களின் ஈரம் காயாத
என் இதழ்களுக்குள் உன் பெயரின் முனகல் ரீங்காரமாய்!!
சில நேரங்களில் நான் உன் அன்னையாய்
பல நேரங்களில் நீ என் தந்தையாய்
என்றும் உற்ற வாழ்க்கை துணையாய்!
உனைக்கண்ட நொடியில் துடிக்கும் என் இதயம்!
காணாப் பொழுதில் மனக்கண்ணில் உருவம்!!
மனதில் உன் நினைவு…
இதழில் உன் நாமம்…
விழியில் உன் பிம்பம்…
என்றும் தூங்காமணிவிளக்காய்…
என்னுள் சுடராக நீ!!
நான் தலை சாய்க்கும் தூணும் நீ!
எனை தாங்கிப் பிடிக்கும் வேரும் நீ!
வீழ்வேன் என்ற கவலை இல்லை…தாங்கிப்பிடிக்க நீ இருப்பதால்!
அழுவேன் என்ற கவலை இல்லை…
அரவணைக்க நீ இருப்பதால்!
தனிமை என்ற பயமும் இல்லை…
என்றும் துணையாய் நீ இருப்பதால்!!
அன்பில் திளைத்து காதலில் கைகோர்த்து மன(ண)தால் இணைந்து….
வாழ்வின் எல்லை வரை சென்று வாழ்ந்திருப்போம் வா என்னவனே!!
@Arun @Kamu pillai Sis
0 Comments