பெயர்
அன்பு மட்டும்
அருண்
தலைப்பு
எனக்கு கிடைக்காத
உறவுகள் பல உண்டு
👸 தாயின் மடியில் தலை வைத்து உறங்கி விட ஆசை
🤴 தந்தையின் கை பிடித்து நடந்து விட ஆசை
👨 அண்ணனின் அன்பில் வாழ்ந்து விட ஆசை
👩 அக்காவின் அரவணைப்பில் இருந்து விட ஆசை
👨 தம்பியிடம் சண்டை இட்டு மண்டி இட ஆசை
👩தங்கையின் பாசத்தில் பணிந்து விட ஆசை
🤴 மாமனின் மனதில் இடம் பிடித்து விட ஆசை
👩 அத்தையின் குறும்புகளை ரசித்து விட ஆசை
🌹தாத்தா பாட்டியிடம்
ஒரு வாய் சோறு உண்று விட ஆசை
🌹சித்தப்பா சித்தியின்
சிரிப்பை கண்டு மகிழ்ந்து விட ஆசை
🌹கூட்டு குடும்பமாக
ஒன்றாக வாழ்ந்து விட ஆசை
🌹எத்தனை எத்தனை
ஆசைகள் என்னுள்ளே
🌹அத்தனையும்
காற்றில் பறக்கும் இலைகளை போல
🌹 வெடித்து சிதறும்
காகிதம் போல
🌹மலர்ந்து உதிரும் பூக்களை போல
🌹நீர் இன்றி காயும் வேர்களை போல
🌹கானல் நீராய்
கண்ணீரின் ஆறாய்
🌹கலைந்து செல்கிறது
கரைந்து செல்கிறது
🌹என் கண்ணீர் யாவும்
அனலாய் சுடுகின்றது
🌹உறவுகள் பல இருந்தும் ஊமையாக நினைக்கிறேன்
🌹யார் என்றும் தெரியாமல்
விவரம் ஏதும் அறியாமல்
🌹தனிமையில் நினைக்கிறேன்
என்னை தாலாட்ட உறவுகள் இல்லை என துடிக்கிறேன்
🌹ஆயிரம் உறவுகளை படைத்த இறைவன்
🌹என்னை மட்டும் ஏனோ அனாதையாக
படைத்து விட்டான்
🌹நீ அனாதை இல்லை நான் இருக்கிறேன் என்று
என்னிடம் ஆறுதல் சொன்னது
என் தனிமை எனும் உறவு
@Iyarkaiyin kaarigai💙
@Kamu pillai Sis
0 Comments