*ம.சுதா கவி*
சிவகங்கை மாவட்டம்
*படக் கவிதை போட்டி*
தலைப்பு : *எட்டாத புத்திக்கு எட்ட வைத்தாயோ* 😢....
அழகாய் கரைந்தாய்
அற்புத பனியே
அலையில் உதிர்ந்தாய்
அரும்பு மலரே !
மண்ணில் சாய்ந்தே
இமைகள் சிமிட்டாயோ
புனலில் மிதந்து கரையின்
பாதம் வந்தாயோ !
யாரும் இல்லா வெறுமை
உந்தன் முகம் காட்டாதோ
உன்னை காணுகையில்
உதிரும் கொட்டுதையா !
உன் மேனி திரும்பி - எந்தன்
துக்கம் தூண்டுதையா
கடல் மாதா மடியில்
தவழ்ந்தே உறங்கினாயோ !
மண்ணை கட்டி கொண்டு
மதியை செவி சாய்த்து
மரணம் எனக்கா என்று
அந்த இறைவனை கேட்டாயா ?
உந்தன் தாய் உன்னை
கடலோரம் விட்டு விட்டு
காது கேளாது சென்றாளோ
கடல் அலை ரசிக்கவே !
உன் விரல் பிடிக்கும் தந்தை உனை மண்ணோடு உலவ விட்டு
இணையத்தே விழுந்ததாலே
நீ கரையோரம் மிதந்தாயோ !
உன் காற் செருப்பை நீ காட்டுவது அசாக்கிரதை கொண்ட எம்மை தலையார அடிக்க வேண்டும் என்றே அர்த்தமோ !
உன்னை காணும் இந்த நிலை எமக்கு ஏன் கிட்டியது வேதனை நான் பட்டிடவா ?இதுபோன்று இனி வேண்டாம் என்றே எனை தட்டி எழுப்பினாயோ !!!
@ Arun
@ Kamu Pillai
0 Comments