பெயர்: ரூபா ஸ்ரீ
*தூது போகும் காதல் கடிதம்*
🪶நான் தேடலில் நுழைந்தபோது
என் ஒளியாய் நீ..!!
🪶தானாய் எந்தன் நாவின் நுனிகள்
உந்தன் பெயரைச் சொல்லி
எனக்கு நினைவூட்டுகிறது..!!
🪶என்ன எழுத சொல்லுகிறாய் ..?
உனக்கு தனியாக
எழுத வேண்டியதை..
அதுவும்..
பொதுவான இடத்தில்..!!
🪶இது வெறும் காகிதமடல் அல்ல
என் இதயத்தின் ஒருபகுதி..!!
🪶எத்தனை முறை உன்னுடன் பேசினாலும் உனக்கு
என் நினைவுகளை கடிதம் எழுதும் போது ஒரு சுகம் சொர்க்கத்துக்கு நிகரானதடா..!!
🪶கடிதம் எல்லாம் பொக்கிஷமாய்
நினைவில் வாழும் நிரந்தரமாய்..!!
🪶அழிந்து போகா அஞ்சல் - நம்
அன்பை வளர்க்கும் நெஞ்சில்..!!
🪶தீங்கனியும் நாவினில் வேம்பாய்க் கசந்திடும்
மாங்கனி பார்த்தால் மதிமுகமாய்த் தோன்றிடும்..!!
🪶கரைதேடும் கடல்மீது படகாய்த் தவிக்கிறேன்..!!
🪶உன்னை கண்ட நாளில்..
உன்னால்..
என் மனதில் விழுந்த..
அந்த காதல் விதை...!!
🪶இன்னும்
இரண்டு இலைகள் விட்ட
வளர்ச்சியோடே இருக்கிறது..!!
*அதுஉன்னால்..!!*
🪶வளர்க்கப்படவும் இல்லை..!!
🪶அழிக்கப்படவும் இல்லை..!!
🪶கனத்த வலியதைச்
சுமக்கும் மனத்தினை
வர்ணிக்குமோ வென்
வார்த்தைச் சங்கிலி?!
🪶தவிக்கும் இதயத்தின்
கதறலைச் சொல்லும்
பொருத்தமானதோர்
கவித்துளி தேடினேன்...!!
🪶தொடருவேன்
தூதை🪶
@ arun🪶
@Kammu pillai 🪶
0 Comments