பெயர் : மு. வள்ளிமுத்துமாலை
தலைப்பு : உயிரான உறவே
அன்புள்ள மாமா
பாசமான மாமா
உன்னை அவ்வளவு பிடிக்கும்
இவ்வளவு பிடிக்கும் என்று சரியாக சொல்லத் தெரியவில்லை ஆனால் என்னை விட எனக்கு உன்னைத்தான் மிகவும் பிடிக்கும்
உன்னிடம் நிறைய பேச வேண்டும் என்று தோன்றும்
ஆனால் ஏனோ
நீ பேச ஆரம்பித்ததும்
எனக்கு எல்லாமே மறந்துவிடும்
சரி
நேரா உன்னிடம் சொல்ல முடியாத வார்த்தைகளை
கைபேசியில்
சொல்லலாம் என்று அழைத்தால் உன்னோட குரல் கேட்டதும்
என் உதடுகள் ஏனோ ஊமையாகிவிடும்...
அதனால்தான்
இந்த கடிதம்
என்னன்னமோ எழுதவேண்டும் என்று மனதில் தோன்றியது
ஆனால்
இப்போது ஊமை ஆனது என் உதடு அல்ல என் பேனா...
நான் சொல்ல நினைக்கும்
என் ஆசைகளை வார்த்தைகளால் எழுதிதான் தெரியவேண்டுமா என்ன
எனக்குள் இருக்கும் உனக்காக உனக்குள் இருக்கும் நான்
எழுதும் வார்த்தைகளை
எனக்குள் இருக்கும் நீயே
உனக்குள் இருக்கும் நான் எழுதாத அந்த வார்த்தைகளின் அர்த்தங்களை எல்லாம்
புரிந்துகொள்வாயே
இப்படிக்கு
உனக்குள் இருக்கும் உன்னவள்....
@இயற்கையின் காரிகை
@kaamupillai
0 Comments