என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்

*அன்பிற்குரியவளுக்கு உன்னவன் தவிப்புடன் எழுதும் மடல்....*💙

*நீ என்னுள் சுகமாய் இருக்கிறாய் நான் சுகமாக இருக்கிறேனா?...*

*காண வேண்டும் என ஏற்பட்ட தவிப்பு*
*கடல் தாண்டுகிறது....* 

*என்னை நினைத்து உடல் வருந்தாதே உனக்காகவே நான் நலமாக உள்ளேன்... எத்தனை தொலைவில் இருந்தாலும் நினைவில் தோன்றி நிஜத்தில் காட்சியளிக்கிறாய் கண்ணெதிரே கானல் நீராக....* 

*கொட்டித் தீர்க்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் கொட்டி விடுகிறேன் வார்த்தைகளை மட்டுமல்ல பல ஏக்கங்களையும்...*

*கடந்த முறை நான் பெற்ற முத்தம் இன்னமும் ஈரம் மாறாமல் நினைவில் உள்ளது... கட்டியணைத்த தருணத்தில் ஏற்பட்ட வெப்பம் கொண்டு இரவு நேரத்தில் இப்போதும் குளிரை தாங்குகிறேன்...*

*என்னை மறந்து விடாதே என நீ கூறிய வார்த்தை நொடிக்கு நொடி மனதை கணப்பொழுதில் கடந்தும் என்னை கடத்தியும் செல்கிறது...*

*உணவுக்கு பஞ்சம் இல்லை என்றாலும் சாப்பிட முடியவில்லை... தூங்கும் நேரம் கிடைத்தாலும் தூங்க முடியவில்லை...*

*உன்னுடன் இருந்து இரவு தூக்கத்தை கலைத்த நான் உன் நினைவுகளில் இரவுத் தூக்கத்தைக் தொலைக்கிறேன்.... காலத்திற்காகவும், காதலுக்காகவும் காத்திருக்கும் நம் பந்தம் வெகு விரைவாக ஒன்று சேர தினம் தினம் பிராத்திக்கிறேன்....*

*என் ஆதங்கத்தை எழுத நினைத்தால் இந்த மடல் என்பது தொடர்கதையாய் தொடரும்....*

*என்னவளே உனக்காக காத்திருக்கிறேன்....* 

*உன் அன்புக்காக காத்திருக்கிறேன்....*

*உன் அரவணைப்பிற்க்காக காத்திருக்கிறேன்....*

*உன் உள்ளத்திற்காக
காத்திருக்கிறேன்.....*

*உன் உயிருக்காக காத்திருக்கிறேன்....*

*காதலுடன் போன நொடிகளை விட காத்திருந்து போன நொடிகளே அதிகம்....*


*உன் பதிலுக்கு வேண்டி காத்திருக்கும்  உன்னவன்......*

படைப்பு : க.அபினேஷ்

தஞ்சம்  : கூடலூர் (தேனி மாவட்டம்)

0 Comments