உறவுகள் பலவிதம்

*ம.சுதா கவி* சிவகங்கை மாவட்டம்

தலைப்பு : *உறவுகள் பலவிதம்* 

ஞான ஒளி திறக்கும் ஆசான் உறவுகள்//

கான ஒலி சிறக்கும் 
தியான இறைவிகள்//

நெஞ்சத்தில் பலம் கோர்க்கும் தோழமை வரவுகள்//

பஞ்சத்தில் தோள் கொடுக்கும் கடமை உறவுகள்//

காந்த நூல் சேர்க்கும் தமிழ் அன்னையின் இளமைகள்// 

தாளங்கள் முழங்கும் இசையின் கவிதைகள்//

கோலங்கள் போடும் வானத்தின் துணுக்குகள்//

வில்லாய் வலைந்த வர்ணத்தின் மாளிகை உறவுகள்//

உள்ளத்தை கீரிடும் தூரோக உறவுகள்//

உதிரத்தை கொடுத்திடும் முகமில்லா உறவுகள்//

உள்ளங்கை வைத்தே உருவம் செதுக்கிய//

ஆன்மாவில் அசைந்தாடும் காரிகை உறவுகள்//

தூரிகை கையாழும்‌ தாரகை வரவுகள்//

சட்டென தொலைந்தே 
காயங்கள் செய்யுமே//

திரும்பா இடம் செல்லும் விடைபெற்ற உறவுகள்//

கண்ணில் ஆறாய் வேதனை சிந்தியே//

கரை புரண்ட வெள்ளமாய் சாய்ந்திடும்//

சாதனை வண்ணமாய் சித்திர உறவுகள்//

காயங்கள் கொண்டே நர்த்தனம் புரியும்//

பணமில்லா வறுமை மிஞ்சியே சென்றிடும்//

பல வேஷ உறவுகள் அல்ல செலவுகள் அவை தூரமே//

கேளி செய்த பல உறவுகள் அங்கே நான் முன்னேறுகிறேன்//

முதுகெலும்பு இல்லாத மூடர்கள் மத்தியில்//

புதிதாய் நானும் பிறக்கிறேன்  முயற்சியிலே//

வெற்றியில் கூடும்  செலவுகளாய் உறவுகள் வேண்டாம்//

முயற்சிக்கு ஆதரவு சேரும் புனித உறவுகள் போதும்//

வர்ணங்கள் பல உண்டு 
அதிற் சிறந்தது உறவின் பலவிதம்//

கடலில் மிதக்கின்ற சறுகாய் நானில்லை//

பல உறவின் மத்தியிலே சிகரம் நான் என்பேன்//

@ Arun
@ Kamu Pillai

0 Comments