என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்

பெயர் : *நிதர்சண கவிஞன் ரஹ்மான்*
தலைப்பு : *என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்*

💌காகிதப் பக்கங்களை நிரப்பிக்கொள்ள ஓர் கவி....!!!

💌என் உயிரானவளுக்கு
 ஓர் உயிரின் ஓசை...!!!

💌வெண்ணிற மேலாடை போத்திய தாரகையே....!!!

💌முரட்டு கைகளுக்குள் தஞ்சம் புகுந்திட வந்த அழகே...!!!

💌இமைமூடா எந்தன் விழிகள் உனைநோக்க.....!!

💌உறங்கா இரவுகளும் காதல் கொள்ளுதடி.....!!!

💌பற்றிய விரலுக்குள் சில்மிஷம் அரங்கேர...

💌தஞ்சம் தேடி வந்ததோ உந்தன் நாணம்...!!!

💌காத்திருக்கும் நாளிகையும் காத்திருக்கும் உன்னோடு காதல் செய்ய.....!!!!

💌கூந்தல் ஏறும் மல்லிகையும் தூக்கிலிட்டு கொள்ளுமடி....!!!

💌உனை பிரிந்த துயர் வேண்டாமென்று....!!!

💌உனை பார்த்து பார்த்து ரசித்த விழிகள்....

💌உனை காணாது என் செய்யும்..... 

💌கண்ணீர் கடலிலே தத்தளிக்கும் குமிழியாய்.....

💌கடல் கடந்த அகதியாய் பாலை வனத்தினிலே....

💌நீ முத்தமிட்டு பட்டாபோட்ட மேனியிலே...

💌ஆழ்துளை குழாயிட்டு இழுக்குதடி ஈக்களெல்லாம்.....

💌ஒத்த புடி சோத்துகுள்ள சொர்க்கத்தையும் வச்சிருந்த.....!!!!

💌கருவாட்டு கொலம்புக்குள்ள என்னையும் புதைச்சுகிட்ட.....

💌கண்டாங்கி சேலைக்குள்ள போட்டுவச்ச முடிச்செல்லாம்...

💌என் கதைய சொல்லுமே தங்கம்....

💌நெஞ்சோடு புதைச்சுகிட்டு நீ விட்ட மூச்சுகாத்தும்....

💌கதகதப்பு குறையாம மண்டையில நிக்குதடி....!!!

💌கதையெட்டு பேசிடும் காதணிகளும்....

💌மேனியோடு உரசிடும் முத்து மணிக்கொலுசும்...

💌என்னோட கதைய சொல்லுமடி ஏ தங்கம்....!!!

💌தூவலிட்டு வார்த்தையோடு  கொஞ்சம் முத்தமிட்டு..

💌 நெஞ்சோடு கலந்த என் சோகத்தையும்,

💌எந்தன் மனசோடு  கலந்த ஏக்கத்தையும்...!!!

💌உன்னோடு சொல்லிடவே தூது விட்டேனடி....

ஏ தங்கம்....!!!!

@⁨Arun⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments