பெயர் :- தனிமையின் தாரகை நிஷா
"காதல் சொல்லும் கவி "
தனிமையில் தனித்து இருந்தேன்...
துணையாய் நீ வந்தாய்...!!!
உறவுகளை வெறுத்து இருந்தேன்....
உறவாய் நீ வந்தாய்...!!!!
ஒரு முறையும் பார்த்ததில்லை...
ஒவ்வொரு முறையும் நலம் அறிந்தாய்...!!!
தினம் தினம் உன் அன்பில் நான் நனைந்து
திகட்டாத காதலை நான் பெறுவேனா?...
கண் கொண்டு உன்னை
கண்டதும் இல்லை.. !!!
கண்டதும் காதல் என்னதும் இல்லை...!!!
பார்க்காமல் பழகி கொண்டேன்...
பழகியதால் தானே
காதலும் கொண்டேன்...!!
தொட்டு உன்னை ரசிக்கவில்லை...
தொடுதிரையில் தான் ரசித்தேன்...!!
தொலைவினில் நீ இருந்தும்
உன்னுள் தானே தொலைந்து போனேன்...!!!
அன்புக்கு அளவே இல்லை...!!
அரவணைப்பில் உன்னை மிஞ்சிட யாருமில்லை....!!!
என் மீது நீயும் பாசம் காட்ட...
உன் மீது நானும் காதல் கொண்டேன்...!!
உன் விழி பார்த்து நான் மயங்க...
இருவரி கவிதை நீ படைத்தாய்...!!!
முதல் வரி நீயாக..
மறு வரி நானாக...
இருவரும் இணைந்து காதல் எனும் கவி படைப்போமா?...
தொலைவில் இருந்து தொல்லை தருகிறாய்...!!
தொலைந்து போகிறேன்
உன்னுள்ளே நானும்...!!
காதலை சொல்ல கவி புனைந்தால்...
கவியும் காதல் செய்கிறது உன்னை...!!!
கவிதையின் காதலனே
காதலை ஏற்பாயா?...
இல்லை என்னை கல்லறையில் சேர்ப்பாயா?...
முடிவு உன் வசம்
நீ தானே என்றும் என் சுவாசம்...!!!
உன் இதயம் எனும் சிறையில்
என் மனம் அடைந்திட
துடிக்குதே...!!
அடைக்கலம் கொடு
ஆயுள் கைதியாய்...!!
@Iyarkaiyin kaarigai💙
@Abinesh Sir
0 Comments