பெயர் :மு.வீரா💙
தலைப்பு: படித்தால் கடிதம்...
ரசித்தால் கவிதை...
புரிந்தால் காதல்
என்னுள்ளே ஒரு கோப்பை கனவு ...
என்னவளே நீ வந்த பிறகு
நித்தமும் துளி கனவு சொட்டியதே
கடலானதே...
அக்காலம் நான் போகும் பாதை
வெறுமையோ கொடுமையே
தனிமையோ...
இந்நேரம் எனதருகில் உன்
உருவம் ஒரு ஒப்பனை
கற்பனையோ...
"அ"எனதொடங்கி "ஓ" அன்பே
எனதாய் "ஔ"க மாறிய உயிரே
பொய்யாக மாறாதே..
மெய்யாகி இன்னும்
நீள வேண்டும் பயணம்...
பிழை என்னுள் ஆயிரம்
என்னை திருத்தும்
எழுத்து ஆயுதம் நீ தானே
என்னை திருத்தி எழுத வேண்டி நிற்கிறேன் உன்னிடம்...
உன் அன்பை நறுமணமாய்
என்றும் சுவாசிக்க
பூவை தாங்கும் செடிபோல
உன்னை என்றும் புன்னகை
உதிராமல் தாங்கிகொள்கிறேன்..
இருளான சூழலில்
மதிகெட்டவனாய் இருந்தேன்
இறைவன் உன்னை அனுப்பிவைத்தாரோ
ஒளிகொடுத்தாய்
வெண்மதியே....
என் இதயம் உருகும் பனிமலை..
அதை உருக்கும் உன் மௌனம் எரிமலை...
பதிலுக்காக காத்திருக்கிறேன்..
புரிந்துகொள்ளடி கண்மணி
என் மனநிலை..
✨@iam_vj_veera
⚡@Arun
⚡@Kamu Pillai
0 Comments