என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்

*ம.சுதா கவி சிவகங்கை மாவட்டம்*

31.10.2021

தலைப்பு: *"என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்"*
           *//(தமிழ் எந்தன் காதலி)//*

இமை எண்ணும் எழுத்து வழி என்னை சுண்டி இழுத்தவளே//

கருவிழி யின் ஒளி மரபில் எந்தன் மனம் கவர்ந்தவளே//

வேர் சொற்கள் படையெடுத்தே கருங்கூந்தல் கலைத்திடுவாய்//

தனிமையெனும் இதழ் பறித்தே தாயமுதை பகிரந்திடுவாய்//

தேன் அமுதின் சன்னல் வழி வீரமிகு வாள் தொடுத்தாய்//

பழமை உன்னில் நினைத்தே புதுமை என்னில் மறைத்தேன்//

உந்தன் சிந்தனை இதயம் எந்தன் கூட்டில் பதித்தேன்//

மக்கள் வாழ்வை காவியப் போர்வை எனை சாய்த்ததே//

சருகாய் விழுகின்ற பனித்துளி உன்னில் மெழுகாய் நான் உருகினேன்//

பொன் ஏர் பூட்டியே விண்ணில் பவணி வருபவளே//

உன்னை நான் எட்டும் வரை தொடருகிறேன்//

பார் போற்றும் வண்ணம் உந்தன் சொற்குவையில்// 

கிண்ணம் அதில் நான் கவியாய்  நிறைகிறேன்//

கீழடி பிளந்த மாங்கனியே கீரியே வந்தாய் மண்ணையே//

கீர்த்தி கொடுக்கும் அன்னையே கீழடி வழியே அடையாளம் தந்தவளே//

சொல் வளத்தின் சரிகையிலே சுழற்றி என்னை சரித்த்வளே//

இலக்கியமாய் செவ்வானில் செந்தூரம் விதைத்தவளே//

கவிதை மழை செய்வேன் உன்னில் மாலை மகுடம் எனக்களிப்பாய்//

இலக்கணமாய் என் இலக்கை அடையும் வழிகாட்டியே//

எந்தன் உயிராய் கலந்த தமிழ் அவளே//

தந்தம் எழுதுகோலாய் இறைவன் எடுத்தவளே//

நான் நித்தம் நித்தம் உன்னை வரைகிறேன் //

நீ எந்தன் கரத்தினில் வளர்கிறாய்//

கவியாய் மலர்கிறாய்  
விதியால் உன் மதியை நான் அறிவேன்//

அறிவுத் தமிழ் காதலியே கனனியான  தமிழவளே என் தேவதையே//

உனக்காய் உன்னிலே சொற்கள் தேடி எந்தனை நிரப்புகிறேன்//

என் காதல் கடிதம் தமிழே உன் காலடி சேருமோ//

இறைவனை வேண்டி இணையத் தூது செய்கிறேன் கேளடியோ.....தமிழே !!!

@ Arun 
@ Kamu Pillai

0 Comments