என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்

தலைப்பு : என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்

என்னுயிரே என் நெஞ்சை கொள்ளையடித்தவளே எப்படி இருக்கிறாய் நலமா"
 உன் மீது ஒருதலையாக காதல் கொண்டவன் நான் இங்கு கலங்கி இருக்க உன் காதலனோடு அங்கு நீ நலமாக இருக்கிறாயா பெண்ணே "
காலங்கள் கடந்து ஓடிய பின்பும் என் நெஞ்சுக்குள் நீ இருக்கிறாய் உன் ஞாபகத்தில் நான் இருக்கிறேனா பெண்ணே"
நீயும் நானும் சேர்ந்து வாழவில்லை சிரித்துப் பேசிக் கொள்ளவில்லை  ஆனால் உன்னை சேர துடிக்கும் என் நெஞ்சுக்கு ஏதாவது ஆறுதல் கூறுவாயா பெண்ணே"
ஆறுதல் கூறவில்லை என்றாலும் பரவாயில்லை" என் உயிர் நீ  என்று நினைத்து உன்னை எப்பொழுதும் காதல் கொண்டிருக்கும் என்னை எப்போதும் மறக்காதே பெண்ணே அதுவே நீ என் காதலுக்கு செய்யும் பெரும் உதவி"
 என் உயிரே  நீ எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் நலமுடனும் வாழ வாழ்த்தும் உன்னை ஒரு தலையாக காதல் கொண்ட  காதலன் நான்"."
பெயர்:இரா.வல்லரசு

@ Arun @ Kamu Pillai

0 Comments