என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்

சங்கவி சகி
நாமக்கல்

தலைப்பு : என்னவனுக்கு இதயக் கடிதம்

💙 இதயனே என்னை சுமக்கும்
     உனது இதயம் நலமா ?
     
💙 ஒரே ஊரில் இருந்தும்
பார்க்காமல் வாழ்கின்றோம்

💙 ஒன்றாய் வாழும் காலத்திலும்
உன் நலம் அறிந்திடுவேன்

💙 உன்னை காணமல் கண்ணிரண்டில்
 கண் மணிகள் அசைவதில்லை !

💙 வேலை செய்யுமிடத்தில் நீ
என்ன செய்வாயோ என்ற சிந்தனையில்

💙 நாழிகை ஆமை போல 
நகர்கிறது நீயில்லாத நாட்கள்

💙 நாள்கணக்காய் உன்னருகில்
இருந்தும் நொடியாய் கழிகிறது

💙 நெஞ்சில் ஒழித்து வைத்த
காமமில்லாத ஆசைகள் எங்கே ?

💙 அதை தேடி தேடி வரிகளாய்
கோர்த்து கடிதமாக்கினேன்

💙 காகிதம் வழியே
உன்னோடு சேர்ந்திட உன்னில் வாழ்திட

💙 நீ படிக்கும் போது உனது
இதய அறைகள் நிரம்பிடுவே நென்று

💙 கடித எழுத்துகளில் உயிராய்
மறைந்து வருகிறேன் அன்பே !!


 @⁨Arun⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments