பிறை நிலவாய் அவள் முகம்

மாதவன் கவிச்சிதறல்

மூன்றாமிடம்

தலைப்பு :
பிறை நிலவாய் அவள் முகம்

தலைப்புகளும் தடம் பதிக்கிறது, 
நிலவாய் அவளிடத்தில்..
கொத்து கொத்தாய் பூத்த பூ அவள்,
சொத்து அல்லவா எனக்கு,
எட்டி பார்க்கும் தூரம் கூட வேண்டாம், 
என்னுடனே இருந்து விடு..
நிழல் கூட நிஜமல்ல,
நிதம் என்னுள் கலந்து விடு,
சொர்க்கமும் நீதான், எனது சொந்தமும் நீதான்,
வாழ்க்கையும் நீதான் 
எந்தன் வர்க்கமும் நீதான்,
அன்பே அரவணைக்க எப்படியும் துணை வேண்டும்,
அரவணைத்து அருள் புரிய நீ எனக்கென வருவாயா ?
கால்களும் தடம் பதிக்கும் கடற்கரையில்,
எந்தன் காதலும் தடம் பதிக்கும் என் மனதறையில்..
ஏக்கங்கள் தூக்கிலட, என்னவள் எண்ணங்கள் வாழ வைக்கும் என்றைக்கும்..
ஒவ்வொரு நாளும் அவள் நினைவுகள் தேயா சுவாடகவே..
அள்ளி பருகி அருந்திட குட நீரில்லை நம் காதல்,
அண்டமும் ஆளும் கடல் நீர்.
பருக பருக குறையாது,
பனிகட்டியாய் ஒரு புறம் உருகி உயரும் நீர்மட்டமாய் இக்காதல்..
நிலவும் நிஜமும் என்னுள் என்றும்,
ஏனோ, அவள் முகம் மட்டும் மறையா வண்ணம் கொண்டு வட்டமிடுகிறது என்னில்..
சங்கட்டங்கள் வந்த கணமும்,
சரி செய்ய பிறை நிலவாம்
அவள் கண் போதும்..
நித்தமும் சுமப்பேன் அவளை, 
ஆதலால் எனக்கேது கவலை..
வட்டமாய் அவள் முகம் வர்ணம் கூடி வலிமை தருவதே போதுமடி 
இந்த ஜென்மத்தில்...

    - மாதவன் கவிச்சிதறல்

Insta id - kavi_chidharal_98

@⁨Arun⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments