பிறை நிலவாய் அவள் முகம்

பெயர் 
அன்பு ❤️ மட்டும்
          அருண்

தலைப்பு :
தேய் பிறை 
வென் மதியாக
என்னவள் 

முதலிடம்...


✨என்ன இது வானத்தில் பல பல  வண்ணங்கள்..!!

✨தேய் பிறை நிலவை போல தேய்ந்து கொண்டே செல்கிறது..!!

✨ஓ இது தான் என்னவளின் முகமோ..!!

✨வானவில்லை போல 
என்னவளும் தேய்ந்து கொண்டே செல்கிறாளோ என் நினைவால்..!!

✨வானவில்லில் 🌈
நிறங்கள் பல உண்டா.!!

✨என்னவளே என் இதயத்தில் நீ  உண்டா..!!

✨விடை தெரியாமலே 
விலகி செல்லாதே..!! 

✨என் விடியலை நீயும் தள்ளி செல்லாதே..!!

✨எத்தனையோ வின் மீன்கள் உன்னையே  சுற்றியிருக்க..!!

✨அத்தனையும் விட்டுவிட்டு நீ என்னை மட்டும் சுற்றி திரிவது
ஏனோ..!!

✨நான் உன் அன்பில் இருப்பதால் தானோ..!!

✨திங்கள் முகம் கொண்டவளே என்னை தினம் தினம் கொன்று புதைத்தவளே..!!
  
✨நின் தேய் பிறை 🌙
முகம் காண என் மனம் தேய்ந்து கொண்டே செல்லுதடி..!!

✨உன் தேடலில் என்னையும் கொஞ்சம் 
கொஞ்ச சொல்லி  கொல்லுதடி..!!

✨மதி முகம் கொண்டவளே 
என்னை மடியில் வச்சி கொஞ்சி சென்றவளே..!!

✨உன் கொஞ்சல் என்னை மீண்டும் கெஞ்சவைக்குதடி..!!

✨மீண்டும் நீ வருவாயா
உன் ஆசை கொஞ்சல் என்னை மட்டும் கொஞ்சி விட்டு போவாயா...

✨தேயாத அம்பகமாக
இருந்த என் இதயம்
இப்பொழுது உன்னை போலவே தேய்ந்து கொண்டே செல்கிறது..!! 

✨உன் நினைவலைகளும்  என்னை கொல்கிறது..!!

✨வான் நிலவு தேய்ந்தாலும்
என் மனதில் என்றும் தேயாத வென் மதி நீ தானே..!!

✨ஏ மின்மினி பூச்சிகளே
உங்கள் வெளிச்சத்தை நிறுத்தி விடாதீர்களே..!!

✨இருளில் இருக்கும் என்னவள் முகத்தை மறைத்து விடாதீர்களே..!!

✨மாதத்தில் ஒரு முறை அவள் மறைந்து செல்கிறாள்..!!

✨என்னை மறந்து செல்கிறாள்..!!

✨அன்று ஒர் நாள் உங்கள் வெளிச்சம் பட்டு அவள் முகம் நான் காண்பேனோ..!! 

✨இல்லை இருளிலே அவள் இன்றி சோகத்தில் மிதப்பேனோ..!!

✨ஏ மின்மினி பூச்சி யே 
என்னவள் முகத்தை மறைத்து விடாதே..!!

✨என்னை மண்ணோடு மண்ணாக மடித்து விடாதே..!! 

✨நானும்  கொஞ்சம் வாழ்ந்து செல்கிறேன் உன் வெளிச்சம் பட்டு  அவள் உருவம் என்னும் நிழலில் ..!!

@⁨Iyarkaiyin Kaarigai⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments