சங்கவி சகி
நாமக்கல்
மூன்றாமிடம்
தலைப்பு : பிறை நிலவாய் அவன் முகம்
🌙வானில் தோன்றிடும்
வெள்ளை மலரே
🌙வானுயர்ந்த போதும்
வாடாமல் இருக்கிறான்
🌙கண்ணீர் இறக்கி
வைக்க வந்தவனே !
🌙வளர்ந்து அன்னை
உருவில் தாலாட்டுகிறாய்
🌙உருவம் முழுதும்
பகலவன் மறைவிலிருக்க
🌙உன்னை கண்டுகொள்ள
அனுப்புவேன் இரவை
🌙நீ தேய்ந்திட
தேகம் இளைக்கிறேன்
🌙இளைத்த நான் தேறிட
நீ வளர்ந்திடு !
🌙இரவில் காணாமல்
இமைகள் மூடுவதில்லை
🌙நினைவால் உறங்காத
பகலும் தொல்லை
🌙பூமிக்கு வந்த
அவன் முகமே
🌙முழுமை காணாமல்
தேகம் சாய்வதில்லை !
@Arun @Kamu Pillai
0 Comments