காமபசியும் குப்பை தொட்டியும்
பங்கேற்பாளர்
தூக்கி வீசிய குப்பை தொட்டியில்
தூர்வாருகின்றது - நாய்குட்டி ஒன்று
அழுகுரல் கேட்டு அங்குமிங்கும் தாவி குதித்து சத்தமிடுகின்றது.!!
சத்தம் கேட்டும் கண்டு கொள்ளாத மானிடர்களோ சாலை வீதிகளிலே...
பசி தீர்க்க வந்த நாய்க்குட்டி பாசத்தை காட்டியது...
பாழாய் போன மானிடனோ முகம் சுளிக்கின்றானே...
பால் மணம் கமழ வேண்டிய உந்தன் மேனியில் எச்சில் இலையின் வாடை வீசுகின்றதே.!!
புன்னகை மொழியில் பேசிடும் உந்தன் சிரிப்பலைகளோ பூகம்பமாய் சிதறி போய் கிடக்கின்றதே.!!
பசித்தீர்க்க வந்தவனும் உந்தன் மேனியை தொட்டதும் தலைத்தெறிக்க ஓடுகின்றானே.!!
வாழை இலையோடு கவ்வி வந்து குழந்தைகள் விளையாடும் இடத்திலே போடுகின்றதே...
வந்தவர்கள் எல்லாம் உன்னை கல்லால் விரட்டியடித்திட...
உனக்கு மட்டுமே தெரியும் காப்பற்றியது யாரென்று...
இறுதியில் தூக்கி எடுத்து பாலூட்ட துடிக்கின்றதோ - மூன்றாம் பாலினம்
கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றதோ - ஆண் பெண் பாலினம்.!!
கு.ரமேஷ்குமார்
படவரி : rameshyogi_10
0 Comments