பெயர் : மு. மாரிச்செல்வி
முதலிடம்
தலைப்பு : *நிறைவேறாத ஆசைகள்*
சிரித்த நாட்கள் எல்லாம் சிறகடித்துப் போக
சிந்தனையும் சில்லறாய் உருள்கிறதே...
நினைத்த எண்ணங்கள் எல்லாம் எல்லாருக்கும் ஏளனமாய் தெரிகிறதே...
சாதிக்கப் பிறந்தவள் என்பதை மறந்து சராசரிப் பெண்ணாக மாறிவிடுவேனோ?
வருத்தங்களும் வழியில் கிடக்கும் முட்களும் வழுக்கி விடக்கூடாது என்றுதான் ஓடிக் கொண்டிருக்கிறேன்
இருந்தும் ஒற்றை அடி எடுக்க ஓராயிரம் முறை அடி வாங்குகிறேனே...
புன்னகையில்தான் புவியில் புகைப்படம் எடுக்கிறேன்
இருந்தும் இதயத்துள் புதைந்து போய் கிடக்கிறேனே!
இமயம் கடந்து சாதிக்கத் தவிப்பாய் தவிக்கிறேனே!
இறைவா எண்ணற்ற வழியில் ஏதாவது ஒரு பாதையை அமைக்கமாட்டாயா?
என் குரல் கேட்கமாட்டாயா?
என்ற நம்பிக்கையில் சுரங்கப்பாதை தோண்டும் ஒரு சராசரிப் பெண்.....
@Sowbarnika Pratibha
@Kamu pillai Sis
0 Comments